தாழ்மை நம் வாழ்வில் அவசியமா?மாதிரி

இயேசு தம்மைத் தாழ்த்தினார்... பிதாவாகிய தேவன் அவரை உயர்த்தினார்!
இன்று, ஆண்டவர் உனக்காகவும் எனக்காகவும் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை எண்ணி நான் அவருக்கு சகல மகிமையையும் கொடுக்க விரும்புகிறேன்! மேலும், 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் மூலம் கடந்த ஒன்றரை வருடங்களில் நான் பெற்ற சில சாட்சிகளை நாளை பகிர்ந்துகொள்கிறேன். ஆண்டவர் செய்த செயல்கள் மிகவும் ஆச்சரியமானவைகள்! ஆனால் இன்று, பிலிப்பியர் 2:5-11-ல் நாம் காணும் இந்த அற்புதமான பத்தியை வாசித்து, அதைத் தியானிக்க நான் உன்னை அழைக்கிறேன், அது உன் ஆத்துமாவை திருப்திப்படுத்தட்டும்.
இது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் தாழ்மையான குணத்திற்கும், நம்மை இரட்சிக்கும்படி பரலோகத்தின் மகிமைகளை விட்டுக்கொடுத்ததன் மூலம் அவர் நமக்குக் காட்டிய அன்புக்கும் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இயேசுவே, உமக்கு நன்றி!
"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:5-11)
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சில சமயங்களில், நீயும் நானும் பெருமையினால் நிரம்பிவிடுகிறோம். நாம் நமது சாதனைகளின் சிங்காசனத்தில் அமர்ந்துவிடுகிறோம், அப்படித்தானே? ‘தாழ்மையாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் தாழ்மையாக இருப்பது எப்படி? தாழ்மை இவ்வுலகில் பாராட்டப்படுவதில்லையே’ என்று நினைக்கிறாயா? தாழ்மை பலவீனம் அல்ல... அது உனக்கான பலம்! அது உன் வாழ்வில் உயர்வைக் கொண்டுவரும். அந்த உயர்வைப் பெற நீ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தியானத்தின் மூலம் அறிந்துகொள்வாயாக!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=humility
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
