தாழ்மை நம் வாழ்வில் அவசியமா?மாதிரி

இயேசுவே தாழ்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரியானவர்
தாழ்மை குணம் இயேசுவின் சிறப்பியல்பை காட்டுகிறது என்பதை நீ எப்போதாகிலும் கவனித்திருக்கிறாயா?
தேவனிடமிருந்து இறங்கி வரும்படி அவர் மனுஷனாக உருவெடுத்தார், மனிதகுலத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கினவராக வந்தார். நிராகரிப்பு, புரிதல் இல்லாமை, சோகம், வலி, கைவிடப்படுதல் மற்றும் துரோகம் ஆகிய இவைகளும் கூட அவருக்குத் தெரியும்.
அவர் சாதாரண மனிதனாக வரவில்லை... மனிதர்களுக்கு சேவை செய்யும் ஊழியக்காரனாகவும், அவர்கள் முன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் அளவிற்கு இருந்தார். இதைத்தான் யோவான் 13:5-ல் பார்க்கிறோம்: “பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.”
பிரபஞ்சத்தின் ராஜா குனிந்து முழங்கால்படியிட்டு தமது சீஷர்களின் பாதங்களைக் கழுவினார் என்பதை நாம் இங்கே பார்க்கிறோம்.
ஒரு வேலைக்காரனைக் காட்டிலும் தம்மைத் தாழ்த்திக்கொண்டு, முழு இருதயத்தோடும் அவர் ஒரு அடிமையைப்போல இருந்தார், அநீதியின் சுமைகளை தம்மீது ஏற்றுக்கொண்டார்: நம் பாவங்களின் பாரமனைத்தையும் சிலுவை மரத்தில் சுமந்து, அவர் மிகவும் வேதனையுடன் கொல்கொதா மலை வரை சென்றார்.
மனிதர்களுக்குள், தூய்மையான மனப்பான்மையை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிந்தவராகிய ஒரு மனிதர், ஆண்டவர் தமக்குக் கொடுத்த எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவராக இருந்தார்... அவரை மகத்துவமானவராக அலங்கரிக்கும் இந்தத் தாழ்மையானது, போலியான தாழ்மை எனும் நிழலால் கறைபடாத சரியான தாழ்மையாக இருக்கிறது.
இது நமக்கு எத்தனை அழகான ஒரு உதாரணமாக இருக்கிறது... நமது ஆண்டவர் என்றென்றும் நிலைத்திருக்கும் மிக அழகான குணங்களில் ஒன்றான தாழ்மையுடன் காணப்பட்டார். அதனால்தான், இதே தாழ்மையை உன் இருதயத்தில் தேடி வளர்த்துக்கொள்ளுமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன். அதன் மூலம், ஒவ்வொரு நாளும், நீ அவருடைய சாயலிலும் ரூபத்திலும் மென்மேலும் வளரலாம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சில சமயங்களில், நீயும் நானும் பெருமையினால் நிரம்பிவிடுகிறோம். நாம் நமது சாதனைகளின் சிங்காசனத்தில் அமர்ந்துவிடுகிறோம், அப்படித்தானே? ‘தாழ்மையாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் தாழ்மையாக இருப்பது எப்படி? தாழ்மை இவ்வுலகில் பாராட்டப்படுவதில்லையே’ என்று நினைக்கிறாயா? தாழ்மை பலவீனம் அல்ல... அது உனக்கான பலம்! அது உன் வாழ்வில் உயர்வைக் கொண்டுவரும். அந்த உயர்வைப் பெற நீ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தியானத்தின் மூலம் அறிந்துகொள்வாயாக!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=humility
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
