என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?மாதிரி

குறைகூறுதலை துதி பலியாக மாற்ற வேண்டிய நேரம் இது!
“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்." (சங்கீதம் 42:5-6)
உன் குறைகூறுதலை துதி பலிகளால் மாற்றியமைத்துக்கொள்ளுமாறு இன்று உன்னை அழைக்கிறேன்... ஏன் மாற்றியமைக்க வேண்டும் என்று நீ கேட்கலாம்? ஆண்டவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: "இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்." (சங்கீதம் 22:3)
- ஆண்டவர் நம் துதிகளில் சிங்காசனத்தை உருவாக்குகிறார்.
- அங்கு, நாம் அவரைத் துதிக்கும் இடத்தில், அவர் வெற்றி சிறந்தவராய் ஆளுகை செய்கிறார்.
- ஆண்டவரைத் துதிப்பது நம் மனநிலையை மாற்றுகிறது.
"இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (புலம்பல் 3:21-23)
தனது குடும்பப் பிரச்சனைகள், சவுலின் நிராகரிப்பு, எதிரிகளின் சூழ்ச்சி மற்றும் பரியாசம் ஆகியவற்றுக்கு மத்தியில் தான், மனமடிவுக்கு உள்ளாகிவிடக் கூடும் என்பதை தாவீது புரிந்துகொண்டார்; ஆனால் ஆண்டவர் நல்லவர் என்பதை தாவீது அறிந்திருந்தார். மேலும் இந்த உண்மையை தனது வாழ்க்கையில் முழுமையாக அனுபவிக்கும்வரை, அதை நினைவில் கொண்டு வாழ்வதைத் தேர்ந்தெடுத்தார்.
எனவே, குறைகூறுதலை துதி பலியாக மாற்ற வேண்டிய நேரம் இது...! குறை சொல்வதை விட்டுவிட்டு துதிப்பதைத் தேர்ந்தெடு. ஆண்டவர் செயல்படுவதைப் பார்! அவர் செய்த சகல உபகாரங்களுக்காகவும் நன்றி சொல். அப்போது குறைகூற உனக்கு நேரம் இருக்காது!
ஒருசில நிமிடங்கள் ஒதுக்கி ஆண்டவரை ஆராதிப்பதன் மூலம் அவர் செய்த சகல உபகாரங்களுக்காகவும் நன்றி சொல்வாயாக! இன்றே நமது குறைகூறுதல்களை துதியால் மாற்றியமைத்துக் கொள்வோமாக!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

“நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக. சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ கலக்கமடைய வேண்டியதில்லை. கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாமல், தைரியமாக நிற்பது எப்படி என்பதை இன்று நாம் காண்போம்!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=discouragementseries
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
