என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?மாதிரி

தேவன் மீதான விசுவாசம்! 💪
“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்." (சங்கீதம் 42:5-6)
இன்று, உன் வாழ்க்கையை சற்று வேகமாக ஆராய்ந்து பார், நீ எதை விசுவாசிக்கிறாய்? உன் தேவைகளுக்காக நீ யாரை நம்பியிருக்கிறாய்? அல்லது எதை நம்பியிருக்கிறாய்?
- உன்னையே நீ நம்பியிருக்கிறாயா?
- உன் மனைவியை நம்பியிருக்கிறாயா?
- உன் வங்கிக் கணக்கை நம்பியிருக்கிறாயா?
- உன் முதலாளியை நம்பியிருக்கிறாயா?
நீ எதை நம்பி வாழ்கிறாய் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் நான் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்கிறேன்: ஒவ்வொரு முறையும் ஆண்டவர் மீது உன் விசுவாசத்தை வைப்பது மிகவும் நல்லது. தம்மை நம்பியிருப்பவர்களுக்கு எவ்வாறு பிரதிபலன் தருவது என்பதையும், பலன் அளிப்பது என்பதையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார்.
வேதாகமம் நமக்குச் சொல்கிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6)
அவரால் நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். நிச்சயமாகவே நமது எல்லா தேவைகளையும் அவர் பூர்த்தி செய்வார். அவரது பரலோக பண்டகசாலையில் ஏராளமான வஸ்துகள் உள்ளன. இன்று, எந்தப் பொருளையும்விட அல்லது வேறு எந்த நபரையும்விட அவரை நீ அதிகமாக நம்பலாம். ஆம், அவருடைய ஐசுவரியம்... அளவிட முடியாதவையாக இருப்பதால், அவரை மட்டுமே நீ விசுவாசித்தால் போதுமானது!
“பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” என்று வேதாகமம் சொல்கிறது. (சங்கீதம் 118:9)
நாம் ஏன் ஆண்டவர் மீது விசுவாசம் வைக்க வேண்டும்? ஏனென்றால், "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" (எண்ணாகமம் 23:19)
உன் ஆண்டவர் நிச்சயம் பொய் சொல்லமாட்டார், அவர் உன் வாழ்வைக் குறித்து உரைத்த தம்முடைய வார்த்தையையும் தமது வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றாமல் பின்வாங்குவதில்லை. தாம் சொன்னதை நிச்சயமாக செய்து முடிப்பார். அதை நீ உறுதியாக நம்பலாம். சந்தேகப்படாமல், அவர் மீது உன் நம்பிக்கையை வைத்து, அவரையே விசுவாசித்து, அவர் உனக்காக என்ன செய்ய விரும்புகிறாரோ, அதற்கு முழுமையாக இடமளிக்குமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன்!
ஆண்டவர் உன்னை அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக!
இந்த திட்டத்தைப் பற்றி

“நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக. சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ கலக்கமடைய வேண்டியதில்லை. கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாமல், தைரியமாக நிற்பது எப்படி என்பதை இன்று நாம் காண்போம்!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=discouragementseries
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
