குயவன் கரங்களில் பாண்டம்மாதிரி

குயவனின் வேலை மீது நம்பிக்கை வைத்தல்
ஒரு குவளையை உருவாக்கும் செயல்பாட்டில், அதை வனைவதற்கு வேண்டிய களிமண் உனக்குத் தேவைப்படும். களிமண் இருக்கும் இடத்தில் குயவன் பாண்டத்தை உருவாக்க மாட்டான், எனவே, அவன் களிமண்ணைத் தேர்ந்தெடுத்து அதை வனையும் ஒரு இடத்திற்குக் கொண்டுவருவான்.
முதலாவதாக, களிமண் ஆயத்தமாக வேண்டும். அதை அப்படியே மட்பாண்டமாக வடிவமைக்க முடியாது; அது வறண்டதாகவும் மண் கட்டிகள் நிறைந்ததாகவும் இருப்பதால் அதன் மீது முதலில் தண்ணீர் ஊற்றப்பட்டு ஈரப்பதத்துடன் பிசையப்பட வேண்டும். அந்த நேரத்தில், அதை வனைவதற்குத் தடையாய் அதில் இருக்கக்கூடிய சில குப்பைகளையும், கூழாங்கற்களையும் உன்னால் எளிதில் அகற்ற முடியும். குயவன் கரத்தில் இசைவாய் இருக்க, மிருதுவான கலவையாக மாறும்படி அதை நன்றாகப் பிசைய வேண்டும். எரேமியாவின் காலத்தில், இந்த செயல்முறை கால்களாலோ அல்லது மரச் சுருளைக் கொண்டோ செய்யப்பட்டிருக்கலாம்.
பாண்டத்தை வனையும் செயல்முறை - குயவன் ஒரு கைப்பிடி நிறைய உள்ள களிமண்ணை எடுத்து, பந்து போல் உருட்டி, அதை சுழலும் அச்சின் மையத்தில் வைத்து சுழலச் செய்யத் தொடங்குகிறான்.
ஒவ்வொரு வகையான குவளைக்கும் தேவையான வேகத்திற்கு ஏற்ப அது சுழலும். குயவன்தான் வேகத்தையும் குவளையின் வடிவத்தையும் தீர்மானிக்கிறான்.
"இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை." (ஏசாயா 64:8)
நீ ஆண்டவர் தாம் விரும்பும் வடிவத்தில் பாத்திரத்தை வடிவமைக்கும் செயல்முறையில் இருக்கிறாய், கவலைப்படாதே, அவர் உன்னை உலகின் மிகச்சிறந்த பரிபூரண நபராக உருவாக்குவார்!
நம்முடைய குறைகளை ஒப்புக்கொண்டு, நம் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைக்கும்போது, "என் வாழ்க்கையை நீர் வடிவமைக்க வேண்டும்" என்று நாம் ஆண்டவரிடத்தில் வெளிப்படுத்துகிறோம்.
நாம் களிமண் என்பதை ஒப்புக்கொள்ள நமக்கு பணிவும் தாழ்மையும் வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் இப்போது, ஆண்டவரது கரங்களில், சகலமும் கனத்துக்குரிய பாத்திரமாக மாறுகிறது!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவரின் வார்த்தையில் உள்ள ஐசுவரியத்தை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம், 18ஆம் அத்தியாயத்திற்கு நமது கவனத்தைத் திருப்புவோம், அங்கு ‘குயவன் கரங்களில் உள்ள பாண்டம்’ - என்ற இந்த வல்லமை வாய்ந்த, ஊக்கமளிக்கும் பத்தியை நாம் தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=potter
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
