பாரத்திலிருந்து விடுதலைமாதிரி

வழி 3: ஜெபம்
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
சங்கீதம் 18:6,16
* கண்ணீரோடு ஜெபம்
* இருதயத்தை ஊற்றி ஜெபம்
* பொருத்தனை ஜெபம்
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக:..நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ;... நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
1 சாமுவேல் 1:10 - 11 , 15
அன்னாள் தன் வாழ்க்கையில் வந்த நிந்தனையினால் மிகுந்த விசாரித்தினால் ஆலயத்திற்கு போய் கண்ணீரோடு இருதயத்தை ஊற்றி பொருத்தனை செய்து ஜெபம் பண்ணினாள். தேவன் அவள் மனத் அழுத்தத்திலிருந்து அவளை விடுவித்து அவள் செய்த ஜெபத்திற்கு பதில் அளித்தார்.
* உபவாச ஜெபம்-
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
எஸ்தர் 4:16 - 17
எஸ்தர் ராணி தன் யூத குலம் முழுவதும் அழியும் நிலையில் மூன்று நாள் உபவாசம் பண்ணினாள். இதன் விளைவாக தேவன் யூதகுலம் முழுவதும் காப்பாற்றினார். நாம் உடலை வறுத்து, உபவாசத்தில் தேவனை நோக்கி ஊக்கமாய் ஜெபிக்கும் போது எஸ்தரின் இக்கட்டை மாற்றினவர் நம் துயரத்தையும் மாற்றுவார். உபவாச ஜெபத்திற்கு மெய்யாகவே வல்லமை உண்டு.
இந்த திட்டத்தைப் பற்றி

" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." லூக்கா 21:34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். இவ்வசனங்களிலிருந்து,'பாரம்' நம் கிறிஸ்துவ ஓட்டத்தை தடுக்கக் கூடியது என்று விளங்குகிறது. தீமையும் கொடுமையும் நிறைந்த இவ்உலகத்தில் 'பாரம் என்கிற சுமை' நம்மை தாக்குகையில் விடுதலையின் வாழ்க்கை வாழ வேதாகமத்திலிருந்து சில வழிகள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக India Revival Ministriesக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவருடைய கணக்கு

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்
