திட்ட விவரம்

பாரத்திலிருந்து விடுதலைமாதிரி

பாரத்திலிருந்து விடுதலை

4 ல் 2 நாள்

வழி 2: நன்மைகளை நினைவு கூறுதல்

கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

சங்கீதம் 77:11,12

தேவனுக்காக உற்சாகமாய் ஆலயத்தில் பாடி அநேக சங்கீதங்களை எழுதின, பாடல் குழு தலைவரான, தீர்க்கதரிசியான (2 நாளா 29:30) ஆசாப், தன் வாழ்க்கையில் ஒரு பெரிய போராட்டத்தை சந்தித்தான்.தன் ஆபத்து நாளில் ஆறுதல் அடையாதவனாய் தன் ஆவி தோய்ந்தவனாய் சஞ்சல படுகிறவனாய் தூங்க முடியாமல் இருந்தான். தன் சஞ்சலத்தின் மிகுதியால் தேவனை நோக்கி அநேக கேள்விகளை கேட்டான்-

ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாதிருப்பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;

சங்கீதம் 77:7 - 9 , 11

இத்தகைய கேள்விகளை நாமும் கூட கேட்டிருக்கக்கூடும். ஆனாலும் சொல்லி முடியாத துயரத்தோடு ஒன்று செய்கிறான். தேவனுடைய கிரியைகளை தியானித்து அதிசயங்களை யோசிக்கிறான்.

அப்படி அவன் தன் வாழ்க்கையில் கர்த்தர் செய்த பழைய நன்மைகளை நினைத்துப் பார்க்கிறான்.இவைகளை எல்லாம் தியானிக்கும்போது தன் மனச்சோர்வில் இருந்து விடுதலை பெற்று தேவனை புகழ ஆரம்பிக்கிறான். துதித்துப் போற்றி அந்த சங்கீதத்தை முடிக்கிறான். அவன் துயரம் எல்லாம் மறைந்து போனது.

ஆசாபைப் போல் நாமும், உற்சாகமான ஊழியக்காரனாகவோ அல்லது விசுவாசியாகவோ இருக்கலாம். சில வேளைகளில் அவனைப் போல் 'தேவன் என்னை மறந்தாரோ?' என்ற எண்ணம் வருகிற அளவிற்கு பயங்கரமான பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், தேவன் நமக்கு செய்த கடந்த கால நன்மைகளை நினைக்கும் பொழுது புது பலன் உண்டாகும்.

சென்ற காலத்தில் சந்தித்த பிரச்சினைகள் எல்லாம் தாண்ட உதவி செய்த எபிநேசர் இனியும் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உண்டாகும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெற்று தொடர்ந்து ஆவிக்குரிய ஓட்டத்தில் ஓட பலன் உண்டாகும். பிரபலமான பாடல் வரிகள் : "துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும் இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும் எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம் கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் கர்த்தர் செய்த நன்மைகள் யாவும் ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய் கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்... Count your blessings"

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

பாரத்திலிருந்து விடுதலை

" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக India Revival Ministriesக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்