திட்ட விவரம்

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்மாதிரி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

7 ல் 3 நாள்

ஆச்சரியம்! அது உண்மையாக இருக்க முடியாது, ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

ஆச்சரியமான ஒரு செய்தி. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது. அங்கு நோய்கள் கிடையாது. இப்படி ஒரு விஷயத்தை நீ எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், இருந்தும்கூட பலர் நம்புகிறார்கள். அதை நம்புவது எனக்குக் கடினமாக உள்ளது.

இதை சற்று கற்பனை செய்து பார். நமது சகாப்தத்தின் தொடக்க காலத்தில்: சுமார் 13 வயது நிரம்பிய இளம் பெண் ஒருத்தி இருக்கிறாள். ஒரு மனிதனுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம் செய்துகொள்வதற்கான ஆயத்தங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. நமக்கு அது மிகவும் இளம் வயதாகத் தோன்றலாம், ஆனால் அந்த நாட்களில் அது மிகவும் சாதாரணமானதுதான்.

அவள் வீட்டிற்குள் நின்றுகொண்டிருக்கிறாள், ஒரு தேவதூதன் வீட்டிற்குள் நுழைகிறான். இதைப் பார்த்து அவள் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பாள் என்று நான் நினைக்கிறேன். இது தினமும் நடக்கக்கூடிய ஒன்று அல்ல! பின்னர் அந்த தேவதூதன் ஒரு புருஷனின் தலையீடு இல்லாமல் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும், அந்தக் குழந்தை விசேஷித்த ஒரு குழந்தையாக இருக்கும் என்றும் அவர் தேவ குமாரன் என்றும் அவளிடம் சொல்லப்போகிறான்.

அது நானாக இருந்திருந்தால் முற்றிலும் அதிர்ந்துபோயிருப்பேன், உனக்கும் அப்படித்தானே இருக்கும்? ஆச்சரியமான ஒரு சம்பவம். நீ எப்படி பதிலளிப்பாய்? இந்தச் செய்தியை நீ பெறுவதாக சற்று கற்பனை செய்து பார்.

இது மரியாளின் வாழ்க்கையில் நடந்தது. அவள் உண்மையில் இதை அனுபவித்தாள். அது எப்படி சாத்தியம் என்று அவள் ஆச்சரியப்படுகிறாள்; அதோடு, "பரிசுத்த ஆவி உன்மேல் வரும்" என்ற வித்தியாசமான ஒரு பதிலைப் பெற்றுக்கொள்கிறாள்.

கிறிஸ்துமஸ் சம்பவத்தின் ஒரு பகுதியான இந்த வரலாற்றைப் புரிந்துகொள்வது உனக்கும் எனக்கும் மிகவும் கடினம்தான். இது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஆனால் மரியாளின் பதில் இன்னும் வினோதமான ஒன்றாக உனக்குத் தோன்றலாம். "சரி, கர்த்தருடைய சித்தத்தின்படியே அவர் எனக்குச் செய்வாராக. நீங்கள் சொன்னபடி நடக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவள் சொல்கிறாள். அவள் தனக்குச் சொல்லப்பட்டவைகள் நடக்கும் என்று நம்பி, கீழ்ப்படிகிறாள்.

இதில் நீ விசுவாசம் எனும் ஒரு முக்கிய அம்சத்தைக் காணலாம். நம்மால் நம்பமுடியாத ஒன்றை நம்புவதுதான் விசுவாசம். இன்றும் அப்படித்தான். இனிமேல் நடக்க இருக்கிற பல காரியங்களை ஆண்டவர் வாக்களித்துள்ளார். நோய்கள் நீங்கும், மரித்தவர்கள் எழும்புவார்கள். இவை நம்மால் நம்ப முடியாத ஒன்றுதான். ஆனால் 'தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. அவர் சொல்வது நிறைவேறும்' என்று தேவதூதன் கூறுகிறான்.

அதுதான் விசுவாசம். ஆண்டவரின் வார்த்தையை நீ நம்பத் துணிவாயா? மரியாளின் முன்மாதிரியைப் பின்பற்றி, "சரி. நான் விசுவாசிக்கிறேன். நான் கீழ்ப்படிய விரும்புகிறேன்" எனக் கூறு.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

லூக்கா எழுதின சுவிசேஷமானது ஒரு படம் எடுப்பதற்கேற்ப அழகாக வடிவமைக்கப்பெற்று சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் அது உன்னை இயேசுவுடன் சேர்ந்து பயணிக்க வழிநடத்துகிறது. கிறிஸ்துமஸ் காலத்துக்கு ஆயத்தமாகும் பயணத்தில் தொடங்கி, அவரது...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=ontheroadtochristmas

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்