திட்ட விவரம்

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்மாதிரி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

7 ல் 2 நாள்

இறுதியாக, எனது கனவு நனவாகியுள்ளது

ஒரு சிறுவனாக நான் எனது முதல் ஓட்டப்பந்தய போட்டிக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன் என்பது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. நான் எனக்குப் பிடித்த நகரத்தில் 15 கிமீ தூரம் ஓடி எல்லைக் கோட்டை அடைந்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. என் கனவு நனவாகியது.

ஆனால் நான் எல்லைக் கோட்டைத் தாண்டிய தருணத்தில் ஏதோ தவறு நடந்துவிட்டது. எனக்காக யாரும் காத்திருக்கவில்லை. அதிக குளிராக இருந்ததால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். வீட்டிற்குத் திரும்பிச்செல்ல போக்குவரத்து வசதி கூட அங்கு இல்லை. மாற்றிக்கொள்வதற்கான இதர உடைகள் எதுவும் நான் கொண்டுபோகவில்லை. கடைசியில் நான் அழுது கொண்டே வீட்டுக்குத் திரும்பிவந்தேன்.

சகரியாவுக்கும் இதேபோன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது. அவர் தேவாலயத்தில் சேவை செய்ய தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் காத்திருக்க வேண்டியிருந்தது, இறுதியாக அவரது நேரம் வந்தது. அப்போது அவரது கோத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் மிக முக்கியமான பணியைச் செய்ய தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். இந்த வாய்ப்பிற்காக அவர் தேவனை மிகவும் நன்றியோடு துதித்திருப்பார். கவனமுடன் உற்சாகம் நிறைந்தவராய் அங்கு தனது பணியைச் செய்தார். பின்னர், திடீரென்று, அந்தச் சூழல் முற்றிலும் மாறுகிறது. ஒரு தூதர் அவருக்கு முன்பாகத் தோன்றுகிறார். அப்போது தன்னால் நம்ப முடியாத ஒரு மிகப்பெரிய வாக்குத்தத்தத்தை அவர் பெற்றுக்கொள்கிறார், அதற்குப் பிறகு அவரால் வாய் பேச முடியாமற்போகவே, மக்களுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை: மக்களுக்கு அது ஏமாற்றமாக இருந்தது.

இறுதியில், சகரியா தனது உண்மை நிலையை ஏற்றுக்கொண்டார், மேலும் ஆண்டவர் இதற்க்கு மேல் எதுவும் செய்யமாட்டார் என்று அவர் நினைத்தார். அவர் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டுமென்று ஏங்கிய இடத்தில அவர் இருந்தாலும் கூட, ஆண்டவரால் அவருடைய உள்ளத்தின் ஆழமான ஏக்கத்தை தீர்க்கமுடியும் என்று சகரியா நம்பவில்லை.

அவரது மிகப்பெரிய ஏக்கம் என்னவென்றால்: தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்பதுதான். அவர் அதற்காக நிறைய ஜெபங்களை செய்திருந்திருப்பார், ஆனால் அது உண்மையில் நிறைவேறும் என்று அவர் நம்பவில்லை. அவர் வயதானவராகவும் சரீரத்தில் மலட்டுத்தன்மையுடனும் இருந்தார். அவருடைய மனைவியும் கூட. ஆண்டவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று அவர் அடிக்கடி சொல்லியிருக்கக்கூடும், ஆனால் தன் உள்ளத்தின் ஆழத்தில் உண்மையிலேயே அப்படி நடக்கும் என்று அவர் நம்பவில்லை.

ஒருவேளை நீயும் இதைப் போலவே நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆண்டவரால் அற்புதங்களைச் செய்ய முடியும் என்று நீ நம்புகிறாயா? ஆண்டவர் உனக்காக ஒரு அற்புதத்தை செய்வார் என்று நீ நம்புகிறாயா?

உன் கனவை ஆண்டவருடன் பகிர்ந்துகொள், அவர் அதைக் கேட்டு, தம்முடைய விருப்பப்படி பதிலளிப்பார் என்று நம்பு. நீ இப்போது கற்பனை செய்வதை விடவும் எதிர்பார்ப்பதை விடவும், காரியங்கள் வித்தியாசமானதாக மாறி அற்புதங்கள் நிகழக் கூடும்; அதிசயங்களைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இரு.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

லூக்கா எழுதின சுவிசேஷமானது ஒரு படம் எடுப்பதற்கேற்ப அழகாக வடிவமைக்கப்பெற்று சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் அது உன்னை இயேசுவுடன் சேர்ந்து பயணிக்க வழிநடத்துகிறது. கிறிஸ்துமஸ் காலத்துக்கு ஆயத்தமாகும் பயணத்தில் தொடங்கி, அவரது...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=ontheroadtochristmas

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்