திட்ட விவரம்

புதையல் வேட்டை 1மாதிரி

புதையல் வேட்டை 1

5 ல் 5 நாள்




முடிவடையா நட்பு (என்றென்றும்…)

பிடி

உன் படுக்கைக்கு அடியில் அல்லது உன் அலமாரியில் ஒரு பேய் அல்லது ராட்சசன் இருப்பதாக நீ எப்போதாவது பயந்திருக்கிறாயா?, விளக்குகளை அணைத்தவுடன் அது உறுதியாக வெளியே வரும் என்று நீ நம்பியிருக்கிறாயா?

அநேகமாக நாம் எல்லோரும் இப்படி பயந்திருப்போம்! அந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று நம்மை சிந்திக்கவைக்கிறது அல்லவா? இந்த விஷயத்தில், நாம் ஏன் சில விஷயங்களைப் பற்றி பயப்படுகிறோம், சில நேரங்களில் முட்டாள்தனமான விஷயங்களை குறித்துக் கூட ஏன் பயப்படுகிறோம்?

எல்லா வகையான பைத்தியக்காரத்தனமான விஷயங்களுக்கும் மக்கள் பயப்படுகிறார்கள். மின்னல் அல்லது பாம்புகள் அல்லது கோமாளிகள் போன்ற விஷயங்களைப் பற்றி நாம் பேசவில்லை, ஆனால் பயப்படவே தேவை இல்லாத விஷயங்களைப் பற்றி பேசுகிறோம். காய்கறிகளை கண்டு பயப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா (lachanophobia)? பொத்தான்களுக்கு பயப்படுபவர்கள் உள்ளனர் (koumpounophobia). ஊதா நிறத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் (porphyrophobia). கடிகாரங்களுக்கு பயப்படுபவர்கள் (chronomentrophobia). அல்லது ஒரு வாத்து அவர்களை கவினித்து பார்க்கிறது என்று பயப்படுபவர்கள் உள்ளனர் (anatidaephobia).

ஒரு விஷயம் இருக்கிறது, மிக முக்கியமான ஒரு விஷயம், நாம் ஒருபோதும் பயப்படத் தேவையில்லை என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது...

படி:

“மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”
ரோமர் 8:38-39

பார்:

இந்த வசனத்தைப் படித்தபின், நாம் எதற்குப் பயப்படத் தேவையில்லை என்று நீ நினைக்கிறாய்? அது சரி-ஆண்டவரின் அன்பை இழப்பதைப் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் என்றும் நமக்காக இருப்பார்! ஓஹோ! ஆண்டவருடனான உன் உறவை எதுவும் உடைக்க முடியாது என்பதே இதன் பொருள்! அவர் என்றென்றும் நம் நண்பர், நம் தேவன்.

ஆனால் ஒரு நிமிடம் பொறு. தவறாக நடக்கக்கூடிய ஒன்று இருக்கிறது. நம் உறவை ஒருபோதும் உடைக்க முடியாது, ஆனால் நம் ஐக்கியம் உடைய வாய்ப்புள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ பாவம் செய்தால் - ஆண்டவருக்கு எதிராக ஏதாவது செய்தால் - உனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர் இன்னும் இருக்கிறார், ஆனால் விஷயங்கள் சீராக இல்லை. உனக்கும் ஆண்டவருக்கு இடையே ஒரு சுவர் உள்ளது. இந்த சுவர் உன்னை துன்பகரமான உணர வைக்கிறது. அவருடன் சுதந்திரமாக பேச முடிவதில்லை. நீ குற்ற உணர்ச்சியால் வெட்கத்திலிருக்கிறாய். அப்போதுதான் நீங்கள் விஷயங்களை மீண்டும் சரிசெய்ய வேண்டும்.

எனவே, நீ என்ன செய்ய வேண்டும்? ஆண்டவருடனான உன் உறவை நீ பாவத்தினால் முறித்துக் கொண்டால், நீ செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். எந்தவொரு நண்பரையும் போலவே, நீ அவர்களுக்கு எதிராக ஏதாவது செய்திருந்தால், நீ உன் தவறை சொல்லி ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனவே, முதலில் நீ பாவத்திலிருந்து வெகு தொலைவில் தள்ளி இருக்கவும், ஆண்டவருடன் நெருக்கமாகவும் இருக்க வேண்டும். ஆனால், இதற்கிடையில் பாவம் உள்ளே நுழைந்தால், உடனே அதை ஆணி அடிப்பதுபோல் அடித்து துரத்த வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் திரும்பவும் உன் வாழ்க்கையில் ஆண்டவர் அற்புதமான விஷயங்களைச் செய்யக்கூடிய நெருங்கிய கூட்டுறவுக்குள் நீ இருக்க இயலும்.

எடு:

நீ அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஜெபிக்க இப்போது ஒரு நிமிடம் ஒதுக்கு. பிறகு, பாவத்தைத் தவிர்க்க உதவும்படி அவரிடம் கேளு. இறுதியாக, அவர் உன்னை ஒருபோதும் கைவிடாமல் மற்றும் எப்போதும் உன்னை நேசிப்பதற்காக அவருக்கு நன்றி சொல்லு. உங்களுக்கு ஒருபோதும் பயம் தேவையில்லை.

புதையல் வேட்டைத் திட்டம் பகுதி 2 (Part-2) வை தொடங்கி வாசிக்க மறந்துவிட்டதே!

நீ சூப்பர்,

Dr. Andy

முழு புதையல் வேட்டை வென்ச்சர் (Treasure Hunt Venture) ஆய்வையும் நீ படிக்கலாம்! தொடரை இங்கே பெறலாம்: https://www.treasurehuntproject.com/

பாக்கெட்-மாங்காவை (comic) இங்கே படிக்கலாம்:

be07c9_2a4cfe5e22f44f6dade5ed16563c656c.pdf (filesusr.com)

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 1

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்