திட்ட விவரம்

புதையல் வேட்டை 1மாதிரி

புதையல் வேட்டை 1

5 ல் 2 நாள்




ஆண்டவரின் வலிமை

பிடி

உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது எது?

சரி, இந்த கிரகத்தில் நீ கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு சக்தியையும் நினைத்துப் பார் - ஒவ்வொரு வலுவான தசையும், ஒவ்வொரு இயந்திரமும், ஒவ்வொரு எரிமலையும்... இப்போது நாம் சூரியன் என்று அழைக்கும் அந்த எரியும் தீப்பந்தத்தை இதனோடு சேர். நீ கற்பனை செய்யக்கூடிய சக்தி அனைத்தையும் ஒருங்கிணைத்தாலும், அது ஒன்றுமே இல்லை. நீ கற்பனை செய்யக்கூடிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தாலும், அது சமுத்திரம் போன்ற ஆண்டவருடைய சக்தியோடு ஒப்பிடும்போது ஒரு துளிக்குக்கூட ஈடாகாது!

(Big Bang) பெருவெடிப்பைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? - பிரபஞ்சம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெடிப்பினால் உருவாகி, இன்னும் புல்லட்டின் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்ற ஒரு கோட்பாடு. ஆனால் விஷயம் என்னவென்றால், ஆண்டவர் அவர் வார்த்தையினால் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார். அட!

இந்த ஆண்டவர் யார் என்பதை வேதாகமம் நமக்கு நினைவூட்டுகிறது…

படி

நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
ஆதியாகமம் 17:1b

பார்

ஆண்டவர் தன்னை எப்படி வர்ணிக்கிறார் ?

சரியாக சொன்னாய்-- சர்வவல்லமையுள்ளவர்

ஆண்டவர் சர்வவல்லமையுள்ளவர், அல்லது எண்ணற்ற வழிகளில் எல்லையில்லாதவர். நிச்சயமாக, நாம் எல்லா வழிகளையும் பார்க்க முடியாது, ஆனால் மூன்றைப் பாப்போம்:

எங்கும் நிறைந்தவர் (எல்லாம் நிறைந்தவர்):

அவர் எங்கும் இருக்கிறார்.

இப்படி சொல்வதால் எல்லாமே தேவன் அல்லது எல்லாமே தேவனின் ஒரு பாகம் என்று அர்த்தமல்ல. ஆண்டவர் தனது படைப்பிலிருந்து வேறுபட்டவர். எங்கும் நிறைந்திருப்பவர் என்றால், நீ எங்கு சென்றாலும், அவர் உன்னுடன் அங்கு இருப்பார். உண்மையில், அவர் இங்கே, இப்போது, உன்னுடன் இருக்கிறார்.

எல்லாம் அறிந்தவர்

அவர் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் முழுமையாக அறிந்தவர் (அவர் பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய தேவை இருந்ததில்லை! பொறாமையா?). ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் 100 முடிகள் வரை இழக்கிறோம் அல்லது புதிதாக பெறுகிறோம் என்பது உனக்கு தெரியுமா? ஆனால் இன்று உன் தலையில் எத்தனை முடிகள் உள்ளன என்பதை ஆண்டவர் அறிவார். நீ அறிவாயா? எல்லாம் அறிந்தவர் என்றால், உன்னை நீ அறிவதை விட ஆண்டவர் உன்னை நன்கு அறிவார் என்பதே! அவருக்கு எல்லாம் தெரியும்.

எல்லாம் வல்லவர்

எல்லா சக்தியும் என்பது சர்வ சக்தி. ஆண்டவர் சகலத்தையும் படைத்த அற்புதமான, கம்பீரமான: வடிவமைப்பாளர், படைப்பாளர் மற்றும் எஜமான்! எந்த விஷயமும் அவருக்கு கடிமானது அல்ல, ஏனென்றால் அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார்.

இதெல்லாம் கேட்பதற்கு சிறிது பயமாக இருக்கிறதா? ஆண்டவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார், அவருக்கு எல்லாம் தெரியும், எல்லா சக்தியும் உண்டு... ஆனால் நீ இன்னும் ஒரு விவரத்தைச் சேர்த்தால் அது உனக்கு அதிர்ஷ்டவசமாக உதவும்: ஆண்டவர் அற்புதமானவர்—அவர் முற்றிலும் நல்லவர், உன்னை நேசிக்கிறவர்!

எடு

இப்போது இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல ஒரு நிமிடம் ஒதுக்கு…

உனக்கு உதவி தேவைப்படும்போது, முதலில் எங்கு செல்ல வேண்டும்? ஏன்?

நீ ஆண்டவருக்கு சொந்தமான ஒருவர் என்பதால் நீ எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும்?

நீ சூப்பர்,

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 1

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்