திட்ட விவரம்

The Chosen - தமிழில் (பாகம் 5)மாதிரி

The Chosen - தமிழில் (பாகம் 5)

6 ல் 5 நாள்




நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்!

இயேசுவைப் பின்பற்றும்படி அவர் என்னை அழைத்ததிலிருந்து அவருடன் நான் பெற்ற வித்தியாசமான அனுபவங்கள் என்னை ஆச்சர்யப்பட வைத்தன. பிசாசு பிடித்தவர்களிலிருந்து பிசாசை துரத்தி விடுவிப்பது, நோயாளிகளை குணப்படுத்துவது மற்றும் பல அற்புதங்களை அவர் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்... இவையனைத்திற்கும் மேல், இயேசுவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் மற்றவர்களிடம் பேசும் விதமும் மற்றும் அன்பை வெளிப்படுத்தும் விதமுமே.

அவரது மென்மையான போக்கினால் மக்களுடன் தனியாகவும் குழுவாகவும் தொடர்பு கொள்ளும் அவரது திறன் அசாதாரணமான ஒன்று. அவரது போதனைகளும் அசாதாரணமான அதிகாரம் நிறைந்ததாய் இருந்தது. ஆகவே, தாம் தயாரித்துக்கொண்டிருந்த பிரசங்கத்தில் பங்குகொள்ளும்படி இயேசு என்னை அழைத்தபோது, ​​அதை ஒரு பெரிய பாக்கியமாகக் கருதினேன். அவர் தயாரித்துக்கொண்டிருந்த பிரசங்கத்தின் பகுதிகளை எழுதவும், அதைப் பற்றிய எனது எண்ணங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

இந்த மிக விசேஷமான பிரசங்கத்தை அவர் தொடங்கப் போகும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது: "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (பாக்கியவான்கள்/பாக்கியவதிகள்)..." ஆண்டவர் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுவதை விட ஒரு பிரசங்கத்தைத் தொடங்க சிறந்த வழி வேறெதுவும் இருக்க முடியுமோ?

பொதுவாக, இந்த வகையான ஆசீர்வாதங்கள் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கு, அரசர் மற்றும் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது, ஏனெனில் அவர்கள் அவற்றிற்கு தகுதியானவர்களாக கருதப்பட்டார்கள். ஆனால் இயேசு வேறு வகையான மக்களை மனதில் கொண்டு இருந்தார்: அவர் ஆவிக்குரிய வறுமையை அறிந்தவர்களுக்கும், அவருடைய ராஜ்யத்திற்காக துன்பப்படுபவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும், தேவ நீதியை நாடுபவர்களுக்கும், சுத்த இருதயமுள்ளவர்களுக்கும், சமாதானத்திற்கு ஏங்கி அதன் வழி நடப்பவர்களுக்கும் அவருடைய ஆசீர்வாதங்களை வழங்குகிறார் (மத்தேயு 5:1-12).

ஆம், அவருடைய ராஜ்யம் இந்த உலகத்தைச் சார்ந்தது அல்ல, அது நம் அமைப்புகளுக்கும் கோட்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல. அதனால்தான் அவர், நம் ராஜா, மேசியா, இந்த உலகத்திற்கு மிகவும் தாழ்மையான வழியில் வந்து, மக்களுடன் இருதயத்திற்கு நேராக ஒரு உறவை தேடி விரும்புகிறார். அவர் அழைக்கும் போது தங்கள் பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரிடம் வருபவர்களின் வாழ்க்கையை அவர் மறுரூபமாக்குகிறார்.

எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் அதுதான் நடந்தது. இயேசு என்னைத் தேர்ந்தெடுத்தார், நான் தகுதியானவனாக இருந்ததால் அல்ல, மாறாக அவர் என்மீது கொண்ட அன்பின் காரணமாக. பாவங்கள் மற்றும் குறைபாடுகளின் கீழ் மறைந்திருந்த என் வாழ்க்கையிலும் கூட பொக்கிஷங்களை அவரால் பார்க்க முடிந்தது. அதற்காக நான் அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது!

நான், என் முழு வாழ்க்கையையும் அவரிடம் அர்பணித்துவிட்டேன். நான் கிறிஸ்துவை, மேசியாவைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன், பின்வாங்க மாட்டேன்.

என் பெயர் மத்தேயு, நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவன்.

குறிப்பு: அன்பரே, இயேசுவை பின்பற்றும்படி அவர் உன்னை தேர்ந்தெடுத்துள்ளார், மேலும் அவர் உன்னுடன் ஒரு ஆழமான உறவில் இருக்க விரும்புகிறார், அது உன் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உன்னை ஆசீர்வதிக்கும். அவர் உனக்காகச் செய்த, செய்யும் செய்யப்போகும் அனைத்திற்கும், மாசற்ற அன்பினால் உன்னை மீட்க உலகிற்கு வந்ததற்காக இன்று அவருக்கு மகிமை செலுத்து…

நீ ஒரு அற்புதமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

The Chosen - தமிழில் (பாகம் 5)

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilchosen

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்