திட்ட விவரம்

The Chosen - தமிழில் (பாகம் 5)மாதிரி

The Chosen - தமிழில் (பாகம் 5)

6 ல் 2 நாள்




உன் கையை நீட்டு

அன்று எங்கள் சிறிய நகர ஜெப ஆலயத்தில் இன்னொரு வழக்கமான நாளாக இருந்தது. அன்று ஓய்வு நாள் என்பதால், நியாயப்பிரமாண கட்டளைகளின்படி சர்வவல்லமையுள்ள தேவனைத் துதிக்கவும், வாசிப்பதைக் கேட்கவும் நாங்கள் அங்கே கூடியிருந்தோம்.

சில சமயங்களில் என் உடலில் இருந்த குறையினால் மற்றவர்கள் என்னை புறங்கூறுவதாக உணர்ந்தாலும், தேவனிடம் நெருங்கி வர விரும்பியதால், ஜெப ஆலயத்திற்கு செல்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முடங்கிப்போன, சூம்பின கை எனக்கு இருந்தது, அது துளிகூட அசையாது. இது ஒரு பிறப்பு குறைபாடு, என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கப் போகின்ற ஒன்று… என் பெற்றோர் செய்த சில பாவங்களின் நிமித்தம் இது ஆண்டவரே அளித்த தண்டனையாக இருக்க வேண்டும் என்று பலர் கூறினர், இது என்னை மேலும் தகுதியற்றவனாக உணர வைத்தது.

ஒரு பெரிய கூட்டம் ஜெப ஆலயத்திற்குள் நுழைந்தது. எங்கள் புறநகரில் அதிக விருந்தாளிகளை காண்பது வழக்கமான ஒன்று அல்ல, ஆகையால் அந்த நாள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன். அது எவ்வளவு சுவாரஸ்யமாக மாறியது என்பதை நீ நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய்.

அந்த மக்களுள் ஒருவர் போதகரைப் போல இருந்தார்; அவர் பெயர் இயேசு என்று பிறகு தெரிந்துகொண்டேன். வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்த பரிசேயர்கள் இயேசு ஏற்படுத்திய இந்த எதிர்பாராத இடையூறால் சிறுமை அடையத் தொடங்கியபோது, ​​அவர் என் கையைப் பார்க்கும்படி என்னிடம் வந்தார். பரிசேயர்கள் அவரிடம் எல்லாவிதமான கேள்விகளையும் கேட்டு, ஓய்வுநாளில் குணமாக்கக் கூடாது என்று மிரட்டினார்கள்.

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: "நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று" கேட்டார். (லூக்கா 6:9)

நான் ஒரு நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் போதகர் அல்ல... ஆனாலும் இயேசுவின் வார்த்தைகள்... அவை மிகவும் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது!

பின்னர் அவர் எனக்காக ஜெபம் செய்து, என் கையை நீட்டச் சொன்னார். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! என் தோலின் வாடிய தோற்றம் படிப்படியாக மறைந்து என் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே தோற்றமளித்தது. நான் என் கையை நீட்ட முயற்சித்தபோது, ​​​​அது செயல்படுவதைக் கண்டேன், என் கை முழுவதுமாக குணமடையும் பொருட்டு என் எலும்புகளும் தசைகளும் ஒன்றாக இசைந்து கொடுக்க ஆரம்பித்தன!

பரிசேயர்கள் இயேசுவைக் கடிந்து கொண்டதோடு, அவரிடமிருந்து விலகிச் செல்லும்படி என்னிடம் சொன்னார்கள், ஆனால் என்னால் அவர்கள் சொல்வதை செய்ய முடியவில்லை. உண்மையில், நான் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு இருந்தேன்: என் கை குணம் பெற்றதால் நான் அளவிற்கதிகமான மகிழ்ச்சியில் ஒளிர்ந்தேன்! செயல்படும் இரண்டு கைகள் இப்போது எனக்கு உண்டு! என் வாழ்நாள் முழுவதும் என்னை வாதித்த அந்த ஊனத்தை, அந்த அவமானகரமான வரம்பை இயேசு நீக்கிவிட்டார். என் வாழ்க்கை இனி முன்போல் எப்போதும் இருக்காது. என் கைகளையும் என் முழு சரீரத்தையும் என்னை இரட்சித்தவருக்கு சேவை செய்ய உபயோகப்படுத்தவே நான் மிகவும் விரும்புகிறேன்.

என் பெயர் ஏலாம், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பரே, ஒருவேளை உனக்கும் உன் வாழ்வின் மீது விழுந்த தழும்புகள், காயங்கள் மற்றும் மன உளைச்சல்கள் உன்னை மதிப்பில்லாத ஒருவரைப் போல் உணரவைக்கலாம். ஆனால் ஆண்டவர் உன்னை மீட்டெடுக்க விரும்புகிறார். அவர் உனக்கு குணமளிக்க விரும்புகிறார், இதன் மூலம் நீ புதுப்பிக்கப்பட்ட வலிமையுடன் எழ முடியும், அவர் மூலமாக உனக்கிருக்கும் பெரும் மதிப்பை உணர்ந்துகொள்ள முடியும். கர்த்தர் தம்முடைய அருமையான மீட்டெடுக்கும் பணியை உன் வாழ்விலும் செய்யத் தொடங்கட்டும்.

நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Chosen - தமிழில் (பாகம் 5)

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilchosen

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்