கீழடக்கி வெல்லும் கலைமாதிரி

The Art of Overcoming

7 ல் 7 நாள்

நாள் 7: மகிழ்ச்சியே கடைசியாக வெல்லும்

நான் அநேக இறுதிச் சடங்கில் மகிழ்ச்சியை பார்த்திருக்கிறேன்.

சரியாக சொன்னல் பெரும்பாலான இறுதிச் சடங்கில். வழியிலும் துன்பத்திலும் கூட, சில குடும்பத்தினரோ,நணபர்களோ மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது பொதுவானதே. அநேகமாக,இறுதிச் சடங்கில் பேச ஒருவர் எழுந்திருக்கும்போது, அவர்கள் சிரித்து-அழுது-சிரித்து அவர்களுடனான தங்கள் நினைவுகளை பகிர்வார்கள். இறுதிச் சடங்கிற்குப் பிறகு அனைவரும் சந்திக்கும் போது, ​​இறந்தவருடன் தாங்கள் பகிர்ந்த நல்ல அனுபவகளை மக்கள் நினைவுகூரும்போது கண்ணீரும் சிரிப்பும் கலந்தே வருகிறது.

தாவீது சங்கீதம் 30:5 ல் எழுதுகிறார், "சாயங்காலத்தில் அழுகை தங்கும்,விடியற்காலத்தில் களிப்புண்டாகும்.” இதே போல பவுலும் 2 கொரிந்தியர் 4:17 ல் சொல்கிறார், “அதிசீக்கிரத்தில் நீங்கும் லேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.” பவுலும் தாவீதும் வலியின் தருணங்களைத் தாண்டி அதை விட சிறந்த ஒன்று காத்திருப்பதைக் கண்டனர்.

நிச்சயமாகவே, மரணம் தாக்கும் போது நீங்கள் உணரும் முதல் உணர்வு மகிழ்ச்சி அல்ல. ஒரு இழப்பின் தொடக்கத்தில், வலி என்பு​​உண்மையானது, காயம் ஆழமாக விழுகிறது, மேலும் துக்கம் நம் தக்தி அனைத்தையும் உறிஞ்சி விடும். ஆம், அழுகை இரவில் தங்கியிருக்கும் — பெரும்பாலும் அது ஒரு நீண்ட, இருண்ட இரவு.

ஆனால் எல்லா இரவுகளும் முடிவுக்கு வருகின்றன. மிக நீண்ட, இருண்ட, சோகமான இரவுகள் கூட முடிவடையும்.உரிய நேரத்தில் சூரியன் உதிக்கிறது, ஒளி இருளை விரட்டுகிறது, நம்பிக்கை மீண்டும் எழுகிறது. நீங்கள் இரவில் அழும்போது, ​​​​காலை வருகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம், மகிழ்ச்சி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் எல்லா இரவுகளும் முடிவுக்கு வருகின்றன. மிக நீண்ட, இருண்ட, சோகமான இரவுகள் கூட முடிவடையும்.

உண்மைதான், நம்மால் சூரியனை உதிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாததை போல, மகிழ்ச்சியையும் தோன்றும்படி கட்டாயப்படுத்த முடியாது. நேரம் முக்கியம். பருவங்கள் வந்து போகும். இப்போது, ​​நீங்கள் அழுதுகொண்டிருக்கலாம், அது பரவாயில்லை — ஆனால் உறுதியுடன் இருங்கள், நீங்கள் எப்போதும் அழது கொண்டிருக்க மாட்டீர்கள். இன்று நீங்கள் துக்கத்தில் இருக்கலாம், ஆனால் நீங்கள் விரைவில் நடனமாடுவீர்கள். மகிழ்ச்சி எப்போதும் கடைசியாக வென்று, சிரிக்கும்.

நீங்கள் மகிழ்ச்சியை கட்டாயப்படுத்த தேவையில்லை, ஆனால் நீங்கள் அதை எதிர்பார்க்க வேண்டும். அது வரும்போது, ​​அதை வரவேற்கவும். அதில் ஓய்வெடுங்கள். அதில் குணமாகுங்கள். அந்த மகிழ்ச்சியில் உங்கள் பலனைக் கண்டறியுங்கள்.

______________________________

இத்திட்டம் உபயோகமாயிருந்ததா? இத்திட்டத்தை நாங்கள் மேறைகொள்ளும் கலை எனும் டிம் டிம்பர்லேக்-இன் புத்தகத்திலிருந்து உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். முழு புத்தகத்தையும் வாசித்து பயன் பெறுங்கள்! உங்கள் பிரதியை இன்றே வாங்குங்கள்! நீங்கள் ஒவ்வொரு பிரதியை வாங்கும் போது ஒவ்வொரு வேதாகமம் தேவைப்படுபவருக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தைப் பற்றி

The Art of Overcoming

வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, ​​விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிப்லீக்கா அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அறிந்துகொள்ள https://www.biblica.com/timtimberlake/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்