கீழடக்கி வெல்லும் கலைமாதிரி

நாள் 6: அங்கீகரிப்பதின் மூலமாக சமாதானத்தை பெற்றிடுங்கள்
இருதயம் உடைகிறது, மாத்திரமல்ல அது சீர்படுகிறது.
அதனால்தான் முடிவுகட்டுவதில் மிக முக்கியமான ஒரு படி இழப்பை அங்கீகரிப்பது — இது இழப்பை சந்தித்த நமது மனதை சமாதானம் செய்து, நமது எதிர்காலத்தில் மென்மேலும் முன்னேற, சரியாக பயணிக்க மன ரீதியான, உணர்வுப்பூர்வமான, ஆன்மீக முடிவு.
ஒரு சில நாட்களில் தன்னுடைய தான் மதித்த நேசித்த அனைத்தையும் இழந்த யோபுவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அங்கீகரித்தல் என்பதற்கு யோபு சிறந்த முன் உதாரணம். ஏனெனில் அவர் தன்னுடைய துக்கத்தை வெளிப்படையாக காணிபித்தார், அதேசமயம் தேவனிடம் கட்டுப்பாட்டை முழுமையாக கொடுத்தார். தேவனுடைய மகத்துவத்தை அறிந்து கொண்டால் மாத்திரமே அங்கீகரித்தல் வரும். யோபு தன்னால் எதை கட்டுப்படுத்த முடியும், எதை சரி பண்ண முடியும் எதை கட்டுப்படுத்தவும் சரி பண்ணவும் முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார்.
யோபுவின் பாடுகள் எவ்வளவு நாள் நீடித்தது என்பது நமக்குத் தெரியாது. குறைந்தபட்சம் சில மாதங்களாவது இருந்திருக்கும். வருடங்கள். ஆனால் அவைகள் முடிந்தது. யோபு புத்தகத்தின் முக்கிய குறிப்புகளில் அதுவும் ஒன்று. அவர் விடாப்பிடியாக இருந்தார், காத்திருந்தார், விசுவாசித்தார். அதே சமயத்தில் அவர் துன்பப்பட்டார், தேவனிடம் முறையிட்டார், கேள்வி கேட்டார். அந்த விஷயங்கள் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை அல்ல.
இறுதியில், கடந்த காலத்தில் வாழ்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை தேவன் தெளிவுபடுத்தினார். யோபு நிகழ்காலம் இப்படிதான் என்று சமாதானம் ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார். மனித தர்க்கத்திற்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட தேவ சமாதானத்தை, அமைதியை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மட்டுமே அது நடக்கும்.
நீங்கள் எப்படி?
துக்கத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைகளில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் விட்டுவிட வேண்டிய ஒன்றிற்காக இன்னும் போராடுகிறீர்களா அல்லது உங்களால் திரும்பப் பெற முடியாத ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் காதில் கிசுகிசுக்கும் குரல்கள் உள்ளதா (யோபுவிற்கு கேட்டது போல்) உங்கள் துன்பம் உங்கள் தவறு என்று கூறுகிறதா? அல்லது உலகை ஆளும் ஆட்சியாளர் நீங்கள் இல்லை என்பதை நினைவூட்டும் ஒரு குரல் உங்களுக்கு பரத்திலிருந்து கேட்கிறதா, எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள், தேவன் ஆளட்டும் என்னும் சத்தம் கேட்கிறதா?
நீங்கள் எங்கிருந்தாலும் சரி, உங்களை நியாயம் தீர்க்க நான் அங்கே இல்லை, நான் உங்களை அவசரப்படுத்த விரும்பவில்லை.
பெரும்பாலும் தேவன் நல்லவர் என்றும் அவர் இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றுமே உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். தொடர்ந்து முன்னேறுங்கள், தொடர்ந்து விசுவாசியுங்கள், தொடர்ந்து தேவ சமாதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மெய்யாகவே, நீங்களும் யோபுவை போல, தேவனுடைய நன்மையும் ஆசீர்வாதத்தையும் மீண்டும் காண்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருடைய கணக்கு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
