சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

அவர் உன் சத்தத்தைக் கேட்கிறார்!
“கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்." (வேதாகமம், சங்கீதம் 27:7)
ஆண்டவர் உன் சத்தத்தைக் கேட்கிறார். அவர் உன்னிடம், “எனக்கு உன்னை தெரியும்", என்று சொல்கிறார்.
- “நீ எப்போது எழுகிறாய், எப்போது படுக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் அறியாமல் ஒரு வார்த்தை கூட உன் நாவிலிருந்து பிறந்ததில்லை.” (வேதாகமம், சங்கீதம் 139:3-4 ஐப் பார்க்கவும்) “இருப்பினும், நான் உன் சத்தத்தைக் கேட்க விரும்புகிறேன். ஒரு அன்பான பெற்றோர் தனது குழந்தையின் குரலைக் கேட்டு மகிழ்வதைப்போல, நீ என்னிடம் பேசும்போது நான் அதை விரும்புகிறேன். இந்த நாளில் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்று கேட்கிறார்.
- ஆண்டவர் உன் மீது இரக்கம் காட்ட விரும்புகிறார். இரக்கம் காட்டுவது என்றால் - மன்னிப்பது, தவறுகளை மறப்பது, ஒருவர் வாழ்வின் மீது அன்பை பொழிவது… உன் வாழ்வின் மீது அன்பை பொழிவது!
- ஆண்டவர் உனக்கு பதில் அளிக்க விரும்புகிறார். அவர் உனக்குப் பதிலளிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன், ஏனென்றால் அவர் உன்னைத் தனிப்பட்ட விதத்தில் மனப்பூர்வமாக நேசிக்கிறார்.
இன்றைக்கான ஜெபம்: “ஆண்டவரே, இன்று நீர் எனக்குச் செவிசாய்க்கிறீர் என்பதை நான் அறிவேன். என் நிலைமை உமக்கு நன்றாகத் தெரியும், என் சார்பாக நீர் கிரியை செய்வீராக. நீர் எனக்குப் பதில் அளிப்பீர், என் மீது இரக்கம் காட்டுவீர் என்று விசுவாசிக்கிறேன், ஏனென்றால் நீர் யார் என்று எனக்குத் தெரியும். உமக்கு நன்றி! இயேசுவின் நாமத்தில், ஆமென்."
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
