சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

பயப்படாதே...
"கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?" (வேதாகமம், சங்கீதம் 27:1)
நீ எப்போதாவது இருளைக் கண்டு பயந்திருக்கிறாயா? உன் இருதயத்தில் பயத்தைத் தூண்டும் ஒரு இருண்ட சூழ்நிலையில் நீ இன்று இருக்கிறாயா? தேவன் ஒளியாயிருக்கிறார் - அவரே உன் ஒளி. நீ பயப்பட வேண்டாம். வேதாகமத்தில் சங்கீதம் 118:6ல், “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்?" என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கர்த்தர் உன் வாழ்வின் அடைக்கலமாய் இருக்கிறார். இந்த அடைக்கலம் தாக்கப்படலாம் ஆனால் அது உறுதியாக நிற்கும். வேதாகமத்தில் சங்கீதம் 46:1-3ல், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்...நாம் பயப்படோம்” என்று மறுபடியும் எழுதப்பட்டிருக்கிறது.
பயப்பட வேண்டாம். இன்று இயேசு உன்னிடம் கூறுகிறார், “நான்தான், பயப்படாதிரு." (வேதாகமம், யோவான் 6:20)
இந்த வாசிப்பின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
