திட்ட விவரம்

ஆண்டவரின் சமாதானம்மாதிரி

ஆண்டவரின் சமாதானம்

7 ல் 5 நாள்




நீ ஒன்றுக்கும் பயப்படாதே!

இன்று, "ஒன்றுக்கும்"... என்ற இந்த வார்த்தைக்கு நேராக உன் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்த "ஒன்றுக்கும்" என்ற வார்த்தையின் அர்த்தம் "எல்லாவற்றிற்கும்" என்பதாகும். வேதாகமத்தில் பிலிப்பியர் 4:6-7ல் அப்போஸ்தலனாகிய பவுல் "ஒன்றுக்கும்" என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்… “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்."

ஆனால் இது எப்படி சாத்தியமாகும்? கவலைப்படாமலா? எப்பொழுதுமா? பணத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமலா, கர்த்தாவே? என் குடும்பத்தில் உள்ள இந்த பிரச்சனையைப் பற்றி கூட கவலைப்படாமலா?

ஒன்றுக்கும் கவலைப்படாமலா? ஆம், வேதாகமம் எதற்கும் கவலைப்படாதே என்றுதான் சொல்கிறது! அது எப்படி சாத்தியமாகும்?

அது, "உண்மையிலேயே உன் உள்ளத்தின் ஆழத்தில் உனக்கு ​​எதுவும் நன்றாக இருக்காதபோதும், உன் உள்ளான உலகம் குழப்பமாக இருக்கும்போதும், நான் நன்றாக இருக்கிறேன்... எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று சொல்வதைப் போன்றது அல்ல. அது ஒருபோதும் அப்படி இல்லை.

அதற்குப் பதிலாக, இயேசு உன்னுடன் இருக்கிறார் என்ற உறுதியையும், நிச்சயத்தையும், ஆழமான நம்பிக்கையையும் பற்றியதாகும். இது சத்தியமும், காலத்தால் மாறாத ஒரு உண்மையும், காலங்காலமாக மாறாததுமாய் இருக்கிறது. (மத்தேயு 28:20)

தேவன், தாம் இருப்பதாக சொன்னால், அவர் இருக்கிறார்! என் நண்பனே/தோழியே, உன் சமாதானம் பரிபூரணமானது. கிறிஸ்துவின் நிமித்தமாக பரிபூரணமானது. கல்வாரியில் அவர் உனக்காகச் செய்த தியாகத்தால் அது பரிபூரணமானது. உனக்காக ஜீவனைக் கொடுக்க அவர் ஒப்புக்கொண்டதால், நீ ஏன் பயத்துடனும் நிச்சயமற்ற நிலையில் வாழ வேண்டும்?

நிச்சயமாக அப்படி வாழத் தேவையில்லை! எனவே, இன்று, “கர்த்தாவே, நான் ஒன்றுக்கும் பயப்படமாட்டேன். நீர் என் மீட்பர்; நீர் ஜீவிக்கிறீர். நான் ஒன்றுக்கும் பயப்படுவதில்லை...சத்துருவின் அம்புகளுக்கு அல்ல, வாழ்க்கையின் புயல்களுக்கும் அல்ல. என் புரிதலுக்கும் மேலான உமது சமாதானம் கிறிஸ்து இயேசுவின் மூலமாக என் இருதயத்தையும் எண்ணங்களையும் வழிநடத்துகிறது. என் வாழ்வும் அதன் இலக்கும் உமது கரத்தில் இருக்கிறது” என்று சொல்லி பலத்துடனும் விசுவாசத்துடனும் அறிக்கையிடு; ஏனென்றால், இயேசு உனக்குச் செவிகொடுக்கிறார்.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவரின் சமாதானம்

சில சமயங்களில், நாம் இனி ஒருபோதும் சமாதானத்துடன் வாழ முடியாதபடிக்கு, இந்த உலகத்தின் சத்தங்களால் மிகவும் நெருக்கப்படுகிறோம். நம் சமூகத்தின் சலசலப்பு மற்றும் சந்தடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிர...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=peaceofgod

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்