திட்ட விவரம்

ஆண்டவரின் சமாதானம்மாதிரி

ஆண்டவரின் சமாதானம்

7 ல் 2 நாள்




சமாதானமே உன்னுடைய சுதந்திரம்!

ஆண்டவர் நீ ஜீவித்திருப்பதை விரும்பினார் மற்றும் அன்பால் உன்னை வடிவமைத்தார் (சங்கீதம் 139: 13-14). ஏன்? நிச்சயமாகவே, நீ நிரந்தர மன அழுத்தம் மற்றும் கவலையுடனான வாழ்க்கையை வாழ்வதற்காக அல்ல! ஆயினும்கூட, ஒவ்வொரு நாளும் நீ வீட்டை நிர்வகிப்பது, தொழில்முறை சம்மந்தப்பட்ட பொறுப்புகள், நண்பருடன் கருத்து வேறுபாடு, பணப் பற்றாக்குறை மற்றும் உன் சமாதானத்தைத் திருடக்கூடிய... வேறு பல காரணங்கள் மற்றும் பல்வேறு வகையான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறாய்.

இப்படியிருக்க, ஒவ்வொரு நாளும் உன் தெய்வீக ஆஸ்தியை நீ எவ்வாறு முழுமையாகப் பெற்றுக்கொள்வாய்? ஆண்டவர் உனக்குக் கொடுக்க விரும்பும் இந்த சமாதானத்தை நீ எப்படி அனுபவிப்பாய்?

அவரை விசுவாசிப்பதன் மூலமாகவும், அவருடைய கரங்களில் உன்னை முழுமையாக ஒப்புக்கொடுப்பதன் மூலமாகவும் கீழே பட்டியலிட்டிருப்பவையை முழுமையாக விசுவாசிப்பதன் மூலமாகவே…

இதை தெரிந்துகொள்:

  • அவருடைய வார்த்தை உண்மையானது
  • அவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் நேசிக்கிறார்
  • அவர் உன்னை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்!

உன் வாழ்க்கையில் நீ ஆண்டவர் இன்னும் முழுமையாகச் செயல்பட காத்திருக்கும் மறைவான இடம் எங்கே? கர்த்தர் இரக்கமுள்ளவராய் இருக்கிறார். அவர் பரிபூரண அன்பின் மனுவுருவானவர். அவர் கதவைத் திறக்க ஒருபோதும் வற்புறுத்த மாட்டார். ஆனால் நீ அவரை அழைத்தால், அவர் உள்ளே வருவார், அவர் உனக்குள் தம்முடைய வாசஸ்தலத்தை உருவாக்குவார்; அவருடைய அன்பும் சமாதானமும் ஒவ்வொரு நாளும் உனக்குள் ஒரு நதியைப்போல பாய்ந்து செல்லும்.

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்: “ஆண்டவரே, இன்று நான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை நீர் அறிவீர். ஆனாலும் நான் ஒவ்வொரு நாளும் என் சமாதானத்தின் சுதந்திரத்தை கொண்டிருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீர், இது எனக்கும் வேண்டும்! நான் உம்மை உள்ளே அழைக்கிறேன்... நான் உம்மை விசுவாசிக்கிறேன். உம்முடைய வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்".

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவரின் சமாதானம்

சில சமயங்களில், நாம் இனி ஒருபோதும் சமாதானத்துடன் வாழ முடியாதபடிக்கு, இந்த உலகத்தின் சத்தங்களால் மிகவும் நெருக்கப்படுகிறோம். நம் சமூகத்தின் சலசலப்பு மற்றும் சந்தடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிர...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=peaceofgod

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்