திட்ட விவரம்

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்மாதிரி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

7 ல் 7 நாள்

சரணடைதல்வனாந்தரத்தில்வெற்றியைத்தருகிறது

மிகக்குறுகியவனாந்தரஅனுபவம்எதைக் கொடுக்கும் என்று யாராவது கேட்டால் அதற்கு பதில் இல்லாமல் இருக்கலாம். வனாந்தர காலமானது சில வாரங்கள் துவங்கி இரண்டு வருட காலம் கூட நீடிக்கலாம். இவை அனைத்துமே நமது இதயத்தின் நிலையையும் அதன் பாங்கையும் பொருத்தே அமையும். நாம்கடினஇதயம்உள்ளவர்களாக இருந்தால், கர்த்தரைப் பற்றிய அக்கறை இல்லாமல் நமது வழிகளில் பிடிவாதமாக இருந்தோம் என்றால் நாம் அங்கே நீண்ட காலம் இருக்க நேரிடும். மாறாக, கர்த்தருக்கும் அவரது வழிகளுக்கும் நம்மை அர்ப்பணித்தோம் என்றால் நாம் இருக்கும் இடத்திலேயே வெற்றியைக் கண்டு கொள்ள முடியும். சரணடைவதுஎன்பதுநம்வாழ்க்கைக்கானகர்த்தரின்சித்தத்துக்குநம்மைக்கீழ்ப்படுத்துவதுஆகும்.நமதுசூழ்நிலைகளில் கர்த்தரின் குறுக்கீட்டுக்கு ஆம் சொல்லுதல் ஆகும். நமது ஆத்துமாவில் இருக்கும் ஒவ்வொரு மறைவிடத்தையும் அவர் செயல்படத் திறந்து கொடுப்பது ஆகும். நாம் எடுக்கும் தீர்மானங்களில் அவரது ஒப்புதல் கொடுக்க விட்டுக் கொடுப்பது ஆகும்.

சரணடைதல்என்பதுகடினமாகவேஇருக்கும்,ஏனென்றால்நம்மைப்பற்றியஅனைத்துகட்டுப்பாட்டையும்நாமேஎடுக்கும் இயல்பு நமக்கு உண்டு. அதன்படி தான் நாம் முன்னேறிச் செல்வோம். ஆகவே நாம் வேண்டுமென்றேஅமைதியாக உட்கார்ந்திருந்து, நம்மிலும் நம் மூலமாகவும் செய்ய அவர் தேர்ந்தெடுப்பதைச் செய்ய கர்த்தரை அனுமதிப்பது ஆகும்.

சரண்டைவது என்பது விட்டுவிடுவது அல்ல. ஆனால் கர்த்தரின் அதிகாரத்துக்குள் சென்றுவிடுவது ஆகும். இதுபலவீனமானசெயல்அல்ல,சர்வவல்லமையானகர்த்தரின்பலத்தின்மீதுஅசையாத நம்பிக்கை கொண்டிருப்பது ஆகும்.

நீங்கள்இப்போதுஒருவனாந்தரத்தின்வழியாகநடந்துகொண்டிருப்பீர்கள்என்றால்,இந்தஜெபத்தைநீங்கள்செய்வீர்களா?

ஜெபம்:

அன்பின்பரலோகப்பிதாவே, இந்தவானாந்தர காலத்துக்காக உமக்கு நன்றி. நான் உண்மையிலேயே யார் என்பதை இப்போது காண்கிறேன். என்னை மீட்பதற்காக உம் மகனை அனுப்பும் அளவுக்கு இன்னும் என்னை நேசிக்கிறீர் என்பதைக்கண்டு நான் வியந்து நிற்கிறேன். இந்தநேரத்தில் என்னை சூழ்ந்திருக்கும் நிலை அனைத்தும் உறுதியற்றவைகளாகவும் நிலையற்றவைகளாகவும் இருந்தபோதும் நிலைத்த தன்மையுள்ளவராக, உறுதியானவராக என் கர்த்தராகத் தொடர்ந்துஇருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.சந்தேகத்துடனும்பயத்துடனும்நான்பேசியசெய்தவைகளுக்காக எனக்கு மன்னியும். உமக்கு எதிராகப் பேசியிருந்தால் என்னை மன்னியும். அனைத்தையும் எனக்கு நன்மையாக மாற்றி நடத்தியதை நான் இப்போது அறிந்திருக்கிறேன். நீர் என் வாழ்வின் அடுத்த நிலைக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறீர் என்பதை நாம் இப்போது அறிந்திருக்கிறேன். நீர் தேர்ந்தெடுக்கிற வழியில் நடத்த நான் என்னை முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கிறேன்.நான் உம்முடையவன்/ள். என்னை உம் அருகில் அணைத்து வைத்துக் கொள்ளும். என்னால்புரிந்துகொள்ளக்கூடியவழியில்என்னுடன்பேசும்.நீர்விரும்புகிறவகையில்எல்லாம்நான்மாறவேண்டும்.இயேசுவின்பெயரால்

ஆமென்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. ...

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்