திட்ட விவரம்

உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 8 நாள்

அன்பிற்கு எதிர்ப்புகள்

இயேசு அன்பாகவே இருக்கிறாரென்பதும், கிறிஸ்துவைப் போன்று அன்பு செலுத்துதலே நமது குறிக்கோள் என்பதும் உண்மையாயின் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு வருவது இயல்பே. தேவன் அன்பாகவே இருக்கிறாரெனில், நமது எதிரியான சாத்தான் அதற்கு முற்றிலும் மாறுபட்டவன் ஆவான். வாழ்க்கை என்பது கடினமானது மட்டுமல்ல, அது ஒரு யுத்தம். ஆடுகள் நேர் வழியில் நிலைப்பதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும் ஒரு மேய்ப்பனின் வழிநடத்துதல் எவ்வளவு அவசியமோ, அப்படியே நாமும் சிதறுண்டு அலையாதிருக்கவும், உலகத்தின் வலைகளில் சிக்கிக்கொள்ளாதிருக்கவும், நமக்குள்ளே நாம் தொலைந்து போகாதிருக்கவும், சத்துருவின் சதி மோசங்களுக்குத் தப்பவும் தேவனை நெருக்கமாகப் பின் தொடர வேண்டும்.



நாம் நமது யாக்கை நிலையாமையைக் கருத்திற் கொண்டு, ப்யூரிடனைப் போன்று கதறி அழுது: 'ஆ கர்த்தாவே, நான் தூளும் சாம்பலுமான ஒரு ஓடு. விலை உயர்ந்ததோ அரியவகையானதோ அல்ல. ஒன்றுமில்லாத ஒரு இல்பொருள். சிருஷ்டிப்பின் நிலையாமையையும் பாவத்தன்மையின் தீமையையும் துன்பத்தையும் பற்றி ஆழமாக உணர்ந்த வன்'.('த வேலி ஆப் விஷன்' லிருந்து 'மனிதன் ஒரு இல்பொருள்'.)



தேவன் அன்பாயிருப்பதும், கிறிஸ்துவை நமது ஆண்டவராகவும் இரட்சகராகவும் நாம் நம்பிக்கொண்டிருப்பதும் உண்மையாயின், நாம் அன்புகூரப்படுவதை உணருவோம். அன்புக்கு எதிரான இருளின் சாம்ராஜ்யத்திலிருந்து மீட்கப்பட்டு உண்மை அன்பின் ராஜாங்கத்தில் நுழைந்துள்ளோம். மேற்கொண்டு எப்படி முன்னேறுவதென்பதை நாம் அறிய வேண்டும்.



இதை நாம் எப்படி செய்வது?

சுவிசேஷத்தின் மீது கண்களைப்பதித்து, சுவிசேஷத்தால் பலப்படுத்தப்படும்போது:



சுவிசேஷமே உண்மை அன்பின் அடித்தளம்.

சுவிசேஷம் அன்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சுவிசேஷம் அன்பை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறது.

சுவிசேஷம் அன்புக்கு அடிபணிய உதவுகிறது.



அவரைப் பின்பற்றவும், அவரன்பில் நடக்கவும், அவரில் அன்புகூரவும், அவரன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் நமக்குத் துணைசெய்ய, தேவனிடம் தினமும் வேண்டுதல் செய்ய வேண்டும்.



உண்மையை இதயத்துக்குக் கொண்டு செல்லுதல்.

உங்கள் மனதைப் புதுப்பித்து இருதயத்தை மறுமலர்ச்சியாக்க ஒரு வேத பகுதியைத் தெரிவு செய்து இதயத்துக்குக் கொண்டு செல்லுவோம்.



சுயத்துக்கு மரித்தல்

நீங்கள் குறித்துக் கொண்ட வேத பகுதி உங்கள் வாழ்க்கையிலுள்ள எந்த குறிப்பிட்ட பாவத்தைச் சுட்டிக் காட்டுகிறது? பவுலடியார் நம்முடைய பழைய மனிதனைக் களைவதைக் குறித்து தெளிவாகக் கூறுகிறார்.



உண்மையை நமது வாழ்க்கையோடு தொடர்பு படுத்துதல்.

புதிய மனிதனை அதாவது கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுதல். உங்கள் மனதிலும், உள்ளத்திலும் இந்த உண்மையை நடைமுறையாக்க, உங்கள் சிந்தனை, மனநிலை, மற்றும் நடத்தைகளில், எந்த குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்