திட்ட விவரம்

உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 10 நாள்

எங்கள் ஒரே விருப்பம் உண்மையான அன்பே.

வாசிக்க: சங்கீதம் 27:4-9,11,14. நெகேமியா: 8:10.

கிறிஸ்துவை முழுமையாக நேசிப்பது நமது ஒரே நோக்கமானால் நம்மை அவரோடு இணைத்துக் கொண்டு அவரை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அதற்காக நாம் நமது சிலுவையை எடுத்துக் கொண்டு நமது வாழ்க்கையை இழக்கவும் அவரது வாழ்க்கையை வாழவும் வேண்டும். சுயத்துக்கும், நமது வழிகளுக்கும், நமது தேவைகளுக்கும், நமது பெருமைகளுக்கும் மரிக்க வேண்டும். இந்த சுய அன்பின் மரணமே கிறிஸ்துவின் அன்பினை நம்மில் உயிர்பெறச் செய்யும். சமாதானம், ஏற்றுக்கொள்ளுதல், அங்கீகாரம், வழி நடத்துதல் மற்றும் மதிப்பிற்காக கிறிஸ்துவை நோக்க வேண்டுமேயன்றி வேறு எவரையோ, எதையோ நோக்கக் கூடாது. நம்முடைய அனைத்து சந்தோஷங்களும் அவரிலே ஆகவேண்டும். அவரே நமது மிகப்பெரிய வெகுமதியாக வேண்டும். அவரில் நாம் எதிர்பார்த்த பலனில் நாம் முழுமையாக அடங்கியிருக்க வேண்டும். தேவனில் அடங்கியிருக்க வேண்டுமேயன்றி நம்முடைய நற்குணங்களிலல்ல. சுயத்தில் நம்பிக்கை வைக்காமல் இருக்க வேண்டும். உண்மையில், நாம் சுயத்தை பின்தள்ளிச் செல்லும்போது தான் கிறிஸ்துவோடு முழுமையாக உறவு கொள்ள முடியும்.



சுயத்தைத் தள்ளி விடுவதென்பது எளிதான காரியமன்று. நம்முடைய வழிகள், நுண்ணறிவு, விருப்பம், சித்தம், பயங்கள், பாதுகாப்பற்ற தன்மைகள், பிரச்சினைகள், கவலைகள், தீவிரத் தேவைகள் போன்றவைகளை விட்டு விடுதல் வேண்டும். இந்த உலகத்தின் மார்க்கங்களையும், சுகங்களையும் எவ்வளவுக்கு விட்டு விலகுகிறோமோ அவ்வளவுக்கு கிறிஸ்துவின் வழிகளிலும், இளைப்பாறுதலிலும், இணைந்து கொள்ள முடியும். கிறிஸ்துவில் மனமகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் அவருக்கு சேவை செய்யவும், அவருக்காகப் பாடனுபவிக்கவும், உற்சாகப் படுவதோடு, அவரை விட்டு விலகுகிற ஆபத்திலிருந்தும் காக்கப்படுவோம்.



கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சியே நமது பலம்.

நாம் அவராலும் அவரது அன்பினாலும் நிறைந்திருக்க விரும்பினால், நமது வழிகளில் எப்படிப்பட்ட கடுமையான புயல்கள் வீசினாலும், எவ்வளவு பெரிய திசை திருப்புதல்கள் வந்தாலும், எவ்வளவு கடினமான சோதனைகள் வந்தாலும், நமது இதயங்களை இயேசுவின் இதயத்தோடு இணைத்துக் கொண்டு அனுதினமும் நடக்க வேண்டும். தினசரி வாழ்க்கையில் இது எப்படி நடைமுறையில் காணப்படுகிறது என்பதைக் குறித்து நாளை காண்போம்.



உண்மையை இதயத்துக்குக் கொண்டு செல்லுதல்.

உங்கள் மனதைப் புதுப்பித்து இருதயத்தை மறுமலர்ச்சியாக்க ஒரு வேத பகுதியைத் தெரிவு செய்து இதயத்துக்குக் கொண்டு செல்லுவோம்.



சுயத்துக்கு மரித்தல்

நீங்கள் குறித்துக் கொண்ட வேத பகுதி உங்கள் வாழ்க்கையிலுள்ள எந்த குறிப்பிட்ட பாவத்தைச் சுட்டிக் காட்டுகிறது? பவுலடியார் நம்முடைய பழைய மனிதனைக் களைவதைக் குறித்து தெளிவாகக் கூறுகிறார்.



உண்மையை நமது வாழ்க்கையோடு தொடர்பு படுத்துதல்.

புதிய மனிதனை அதாவது கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுதல். உங்கள் மனதிலும், உள்ளத்திலும் இந்த உண்மையை நடைமுறையாக்க, உங்கள் சிந்தனை, மனநிலை, மற்றும் நடத்தைகளில், எந்த குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்