துக்கத்தை கையாளுதல்மாதிரி

அற்ப விசுவாசம் அல்லது உறுதியான விசுவாசம்
மார்த்தாளும் மரியாளும் இயேசுகிறிஸ்துவை கல்லறையில் முதன்முதலில் சந்தித்தபோது இருவரும் அவரிடம் இவ்வாறு கூறினார்கள் “நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்”
இயேசுகிறிஸ்து அவர்களை அற்ப விசுவாசத்திலிருந்து நான் உறுதியாக விசுவாசிக்கிறேன் என்ற நிலைக்கு கொண்டு செல்ல விரும்பினார்.
“உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்று இயேசு அமைதியாகவும் அன்பாகவும் சொன்னபோது, “ஆம், ஆம், அது எனக்குத் தெரியும்!” என்று மரியாள் கிண்டலாகப் பதிலளித்தாள். ஆனால் அவள் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், “இந்தக் கொடூரமான காரியம் நடக்காமல் இருக்க நீர் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்" என்று அவள் உண்மையில் கூறிக்கொண்டிருந்தாள்.
இதற்கிடையே, “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்று தொடர்ந்து கூறினார். பின்பு அவர் அவளை நோக்கி, மாியாளே ”இதை விசுவாசிக்கிறாயா?” என்ற ஒரு குறிப்பான கேள்வியை கேட்டார், அதற்கு அவள் “ஆம், ஆண்டவரே விசுவாசிக்கிறேன்” என்று பதிலளித்தாள்.
மரணத்திற்குப் பிறகு, எல்லா மனிதருக்கும், நித்திய ஜீவன் மற்றும் நித்திய மரணம் (ரோமர் 6:23), ஆகிய இரண்டு நேரடி முடிவுகள் காத்திருக்கின்றன என்று வேதம் தெளிவாக கூறுகிறது. இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகிறார்கள். ஒரு விசுவாசி மரித்தால், அவனுடையஉடல் கல்லறையில் உள்ளது, ஆனால் அவனுடைய ஆத்துமா உணர்வோடு உடனடியாக இயேசுகிறிஸ்துவின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நம்முடைய ஆத்துமாவின் உடனடி முடிவு பரலோகம், ஏனென்றால் இயேசுகிறிஸ்து தாமே பரலோகத்திற்கு ஏறிச் சென்றார் (அப்போஸ்தலர் 1:11) தற்போது நமக்காக ஒரு வீட்டை ஆயத்தப்படுத்துகிறார்.
நாம் மரிக்கும் போது, உணர்வோடு உடனடியாக பரலோகத்தில் உள்ள நமது இரட்சகரின் முன்னிலையில் கொண்டு செல்லப்படுகிறோம்.
மரித்த நம் அன்புக்குரியவர்கள் நமக்கு முன் பரலோகத்திற்குச் சென்றுவிட்டனர். அவர்கள் கடந்த காலத்தில் இல்லை - எதிர்காலத்தில் இருக்கிறார்கள்.
நம் அன்புக்குரியவர்களின் மரணத்தை பார்க்கும் “கோணத்தை" மாற்ற வேண்டும். அவர்களை “கடந்த காலத்தில் மரித்தவர்கள்" என்று பார்ப்பதற்குப் பதிலாக – “பரலோகத்தில் முழுமையாக உயிருடன்" பார்க்க ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் அவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து பரலோகத்தைப் பற்றி நிறைய போதித்தார். அவர் அதை இறையியல் ரீதியாக ஒரு குறுகின இடமாகக் கற்பிக்கவில்லை. அதை தமது உண்மையான ஒரு வீடு என்று விவரித்திருக்கிறார். அவருடைய பிதா அந்த இடத்தில் இருக்கிறார் (லூக்கா 10:21), அங்கு எல்லாம் அவர் சித்தப்படியே நடக்கிறது (மத். 6:10). தம்மைப் பின்பற்றுபவர்களை அங்கு முதலீடு செய்ய ஊக்குவித்தார் (வசனங்கள். 19–21). அவர் அங்கிருந்து (யோவான் 3:13) திரும்பி வர ஆசிக்கிறார். மேலும் தம்மைப் பின்பற்றுபவர்களை தம்முடன் வாழ்வதற்கு அழைத்துச் செல்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார் (14:1-3).
இயேசு மார்த்தாளிடம், “இதை நீ நம்புகிறாயா?” என்ற கேட்ட கேள்வியானது மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் முடிவுக்கு அவளைக் கொண்டு வந்தது (யோவான் 11:26).
இது புண்பட்ட இருதயங்களுக்கு பரலோகத்தின் நம்பிக்கையை கொண்டு வரும் ஒரு ஆழமான எளிய பரிவர்த்தனையாகும். இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது - ஒன்று நமது பொறுப்பு, மற்றொன்று அவருடைய வாக்குறுதி. இதை நீங்கள் விசுவாசித்தால், அவர் உங்கள் உயிர்த்தெழுதலாகவும், உங்கள் ஜீவனாகவும் இருப்பார்.
மார்த்தாளுடைய பதிலானது இயேசு கிறிஸ்துவிலுள்ள அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது.
“ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றாள் (யோவான்11:27).
மார்த்தாளின் வாழ்க்கையில் மிக இது ஒரு முக்கியமான நாள், இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பியதன் மூலம் அவளுடைய உடனடி வலியை நீக்கிய நாள் அல்ல, மாறாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முன் நின்று அவரை விசுவாசித்த நாள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் இயேசுகிறிஸ்துவுடன் பரலோகத்தில் அவளும், அவளுடைய சகோதரியும், அவளுடைய சகோதரனும் அனுபவித்து வரும் வாழ்க்கையை பெற்ற நாள் அது.
இந்த நாள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாகவும் இருக்கலாம், ஏனெனில் நீங்கள் இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சராகவும் ஆண்டவராகவும் விசுவாசிக்கிறீர்கள், விரைவில் நீங்கள் கர்த்தரைச் சந்திப்பீர்கள் என்பதை அறிவீர்கள், மேலும் அவரோடும் அவரை விசுவாசித்து நமக்கு முன்னே சென்றுள்ள நம் அன்புக்குரியவர்கள் அனைவரோடும் நித்தியத்தை செலவிடுவீர்கள்.
மேற்கோள்: “நம்முடைய மனநிலைகள் மாறினாலும், ஒரு காலத்தில் நாம் ஏற்றுக்கொண்ட நிலையைப் பற்றிக் கொள்ளும் கலையே விசுவாசம்." சி.எஸ்.லூயிஸ்
ஜெபம்: ஆண்டவரே, நீர் யார் என்று நான் விசுவாசிப்பதால், என் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
