திட்ட விவரம்

துக்கத்தை கையாளுதல்மாதிரி

துக்கத்தை கையாளுதல்

10 ல் 1 நாள்

துக்கப்படுவது சரியானது


நாம் நேசிக்கும் ஒருவர் மரிக்கும்போது, பலவிதமான உணர்வுகளால் அடிக்கடி தாக்கப்படுகிறோம். அதற்காக அழுவதோ, புலம்புவதோ தவறில்லை. தேவன் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருகிறார், அது நீண்ட காலத்திற்கு கிரியை செய்கிறது என்ற யதார்த்தம் தற்போது  நாம் உணரும் வலியை குறைக்காது.


மரணத்தை கையாள்வது எவ்வளவு பயங்கரமானது மற்றும் வேதனையானது என்பதை தேவன் புரிந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து லாசருவை உயிரோடு எழுப்பியதை வாசிக்கும்போது தேவன் மரணத்தை எப்படிக் கருதுகிறார் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் நமக்குக் கிடைக்கிறது.


இயேசுகிறிஸ்து லாசருவின் கல்லறையில் கண்ணீர் விட்டு அழுதபோது, துக்கப்படுவது சரியென்று நமக்குக் காட்டுகிறார். துக்கத்தை அனுபவிப்பது பாவமல்ல என்பதை எடுத்துரைக்கிறார். ஆழ்ந்த உணர்வு என்பது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல என்பதை  சுட்டிக்காட்டுகிறார்.


நாம் அழுவதைப் போல இயேசுகிறிஸ்துவும் அழுதார். நாம் கண்ணீர் சிந்துவது போல் அவரும் கண்ணீர் சிந்தினார். நாம் உணர்வுகளால் மனதுருகுவதுப்போல் அவரும் மனதுருகிறார். இயேசு அழுதார், இது அவருக்கு இருதயம் இருப்பதைக் காட்டுகிறது. நமக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டு மனதுருக்கமில்லாத தேவனுக்கு நாம் சேவை செய்யவில்லை என்பதை இது குறிப்பிடுகிறது. எனவே உங்கள் கவலைகளை தேவனிடம் கொண்டுச் செல்ல பயப்பட வேண்டாம்.




“நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.” என்று எபிரேயர் 4:15 நமக்கு கூறுகிறது.




அவருடைய நெருங்கிய நண்பரும் உறவினருமான யோவான் ஸ்நானகன் கொல்லப்பட்டபோது இயேசுகிறிஸ்துவும் வருத்தப்பட்டார். 


லாசரு மற்றும் யோவன் ஸ்நானகன் ஆகியோருடைய  மரணங்களுக்கு அவரது எதிர்வினை வேறுபட்டிருந்தது. மேலும் எப்படி துக்கப்பட வேண்டும் என்பதை அவருடைய இந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.


மத்தேயு 14:13ல், இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே சென்றதைக் காண்கிறோம். அவர் துக்கமடைந்தார். யோவானுக்கு நடந்ததைக் கேட்டவுடன் அவர் மனம் உடைந்து போனது. மேலும் அவர் சிறிது நேரம் தனியாக இருந்து, ஜெபிக்கவும் மற்றும் சிந்திக்கவும் விரும்பினார்.




உங்கள் துக்கத்தில் தனியாக இருந்து, பிரச்சனைகளை சிந்தித்து, தேவனுடன் நேரத்தை செலவழித்து, அவரிடம் பல கேள்விகளை கேட்கும் நேரங்கள் இருக்கும். இது முற்றிலும் சரியான ஒன்று தான்.




ஆனால் இயேசுகிறிஸ்து எங்கே போகிறார் என்பதை கேள்விப்பட்ட ஜனக்கூட்டம், கால் நடையாகப் பயணித்து, இயேசுவைச் சந்தித்ததாக வாசிக்கிறோம்.


 


நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்திருக்கிறீர்களா?  அப்படி உணரும்போது, நீங்கள் தனியாக விலகி இருந்து துக்கப்பட வேண்டும்.  ஆனால் அப்படி செய்யும்படிக்கு வாழ்க்கையின் தேவைகள் உங்களை அனுமதிக்கவில்லையா?




இந்த சூழ்நிலைக்கு இயேசுகிறிஸ்து எவ்வாறு பதிலளித்தார்? அவர் கூட்டத்தைக் கண்டதும் அவர்கள் மீது மனதுருகியதாகவும், அவர்களில் பிணியாளிகளைக் குணப்படுத்தும் பணியில் உடனடியாக ஈடுபட்டதாகவும் வேதம் கூறுகிறது. இயேசு தம் அன்பான நண்பரின் இழப்பை எண்ணி வருந்திய போதிலும், அவருடைய துக்கம் அவரை ஊழியம் செய்ய வலுவூட்டியது. அவரது உணர்ச்சி வலியின் மத்தியில், அவர் உள்நோக்கி பார்ப்பதற்கு பதிலாக வெளிப்புறமாகத் பார்த்தார் தம்மைத்தாமே திரும்பிப் பார்த்துக் கொண்டு, “எனக்கு ஐயோ " என்று நினைத்துக்கொள்வதற்கு பதிலாக, சேவை செய்வதற்கும் கூட்டத்தை நேசிப்பதற்கும் அவர் வெளிப்புறமாகத் திரும்புகிறார்.




நாம் துக்கமாக இருக்கும்போது அதை சுய-பச்சாதாபமாகவும், வெறுப்பாகவும் மாற்றிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பிறரை நேசிக்கவும் சேவை செய்யவும் நமது துக்கமானது வல்லமையை தர வேண்டும். நீங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும், இயேசுகிறிஸ்துவின் அன்பு அதிகமாக தேவைப்படும் மக்களுக்கு இரக்கத்தைக் காட்ட பயன்படுத்துங்கள்.




துக்கத்தின் மத்தியில் வாழ்க்கையை நகர்த்துவதற்கு இது ஒரு திறவுகோலாக இருக்கிறது. உள்நோக்கிப் பார்த்து எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அவ்வளவாக கடந்த காலத்தில் சிக்கிக்கொள்வோம். வெளிப்புறமாகப் பார்த்து மற்றவர்களுக்கு சேவை செய்யத் தொடங்கும் போது, நாம் எதிர்காலத்திற்குச் செல்கிறோம்.




மேற்கோள்: தேவன் யார் என்பதைப் பற்றிய நமது உயரிய மற்றும் தாழ்ந்த சித்திரங்களை விட்டுவிட்டு, “தேவன்” என்ற வார்த்தை உலகின் அழுகையுடன் அழக்கூடிய சித்திரங்களோடு பார்க்கப்படும்போதுதான் உண்மையான அர்த்தம் என்ன என்பதைக் கண்டறிய முடியும். -டாம் ரைட்




ஜெபம்: ஆண்டவரே, என் துக்கத்தை நீர் புரிந்துகொண்டதற்காக நான் நன்றி கூறுகிறேன். என் துக்கத்தில் உதவி மற்றும் ஆற்றலுக்காக நான் உம்மிடம் வருகிறேன். ஆமென்





நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

துக்கத்தை கையாளுதல்

நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்