BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி

நித்தியமான சமாதான ஆளுகைக்கு வழிவகுக்கும் சமாதான பிரபுவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் ஏசாயா தீர்க்கதரிசி. ஏசாயாவின் வார்த்தைகள் இயேசுவின் வருகை மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால்தான் தேவ தூதர்கள் இயேசுவின் பிறப்பை "பூமியிலே சமாதானம்" என்று விவரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசிக்கவும் :
லூக்கா 2 : 9 - 15
சிந்திக்கவும்:
ஏன் பெயர் அறியப்படாத மேய்ப்பர்களுக்கு ராஜாவின் வருகையை தேவன் அறிவித்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தேவனின் தன்மை அல்லது குணாதிசயம் மற்றும் அவருடைய ராஜ்யம் பற்றி இது உங்களுக்கு என்ன சொல்கிறது?
அந்த இரவு மேய்ப்பர்களுடன் அங்கு இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
தூதர்கள் அவரை போற்றி கூறிய அறிவிப்பில், " உன்னதத்தில்" மற்றும் "பூமியில்" என்ற வார்த்தைகளை கவனியுங்கள். இயேசுவின் பிறப்பின் போது உன்னதமான பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தது என்ன? இது எப்படி நற்செய்தியாகும்? உங்களின் பிரமிப்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்த உங்கள் சிந்தனைகள் ஒரு பிரார்த்தனையை செய்ய தூண்டட்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்
