திட்ட விவரம்

நான் புறம்பே தள்ளுவதில்லைமாதிரி

நான் புறம்பே தள்ளுவதில்லை

5 ல் 5 நாள்

உன்னை இழந்து போவதில்லை


 


           நீங்கள் அநேக பொருட்களை, இடங்களை, ஆசீர்வாதங்களை இழந்திருக்கலாம். சில மனிதர்களை கூட இழந்திருக்கலாம். அதுமட்டுமல்லாது உங்களுடைய உறவை, நட்பை உங்களை சுற்றியுள்ளவர்களை இழந்திருக்கலாம். கவலைப்படாதிருங்கள், சிறந்த நற்செய்தியை உங்களுக்கு சொல்கிறேன், இயேசுவானவர் உங்களை இழந்து போவதில்லை. வேறு எவரிடத்திலும், அது சாத்தானாயிருந்தாலும்  உங்களை விட்டு கொடுப்பதில்லை.


 


          பதினெட்டு ஆண்டுகளாய் சாத்தானால் கட்டப்பட்டிருந்த கூனியை  [லூக்கா 13:11] இயேசுவானவர் விடுதலை கொடுப்பாரானால், சில ஆண்டுகளாய் போராடுகிற உங்களுக்கு விடுதலை கொடுக்காமல் இருப்பது எப்படி? நிச்சயமாய் விடுவிப்பார். ஏனென்றால், உங்களை இழந்துபோவதற்கு இயேசு ஆயத்தமாக இல்லை.    


 


          ஒருவேளை நீங்கள் கருதலாம், ஏன்? ஆண்டவர் இவ்வளவு காலம்  கழித்து விடுதலை தருகிறார். உடனே, விடுதலை தரலாமே என்று. நாம் சாதாரண மனிதர்கள், நமக்கு நன்மை செய்தவர்களை எளிதில் மறக்கக்கூடியவர்கள். தெய்வமும் தேவையில்லையென்று உடனே சிந்திக்கக்கூடிய செயல்திறன் உடையவர்கள். 


 


        விடுதலை பெற்ற அந்த கூனியை சிந்தித்து பாருங்கள். அவள் பதினெட்டு வருஷமாய் பாடுபட்டாலும் ஆலயம் செல்வதையோ, ஜெபிப்பதையோ விடவில்லை. அவள், தான் சுகமாகவில்லையானாலும் சோர்ந்துபோகவில்லை. தெய்வத்தையும் விடவில்லை. இயேசுவை விடாமல் பற்றிக் கொண்டாள்.


 


       இப்படிபட்டவளை இயேசுவானவர் சாத்தானிடம் எப்படி விடுவார். இவள் இயேசு கையில் இருக்கிறாளே. இவர் கையிலிருந்து  சாத்தான் எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இயேசுவானவர் இவளை அழைத்து அனைவருக்கும் முன்பாக கூனியை சுகமாக்குகிறார்.  


 


      இயேசுவானவர் உங்களை இழந்து போக விரும்பவில்லை. நீங்கள் அவர் கையிலிருந்து விலகிப் போக விரும்பாதிருங்கள். அப்பொழுது, அற்புதத்தை உடனே பெறுவீர்கள்... ஆமென்.



வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

நான் புறம்பே தள்ளுவதில்லை

இயேசுவானவர் மட்டுமே தன்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை. தன் ஆஸ்திகள் அனைத்தையும் அழித்த கெட்டக் குமாரனை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தவர். உங்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந...

More

இந்த திட்டத்தை வழங்கிய கடவுளின் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/kog.vlog

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்