நான் புறம்பே தள்ளுவதில்லைமாதிரி

உங்களைத் தள்ளாதவர்
விசேஷ காலங்களில் ஒரு வீட்டிலோ, சபையிலோ, பொது கூட்டங்களிலோ சிறு பிள்ளைகள் ஒரு பொருட்டாக அங்கீகரிக்கப் படுவதில்லை, சிறு பிள்ளைகள் ஏதாவது தவறிழைத்து விடுவர். ஏதாகிலும் பேசிவிடுவர் என்ற பல காரணங்களால் பல இடங்களில் சிறு பிள்ளைகள் அங்கீகரிக்கப் படுவதில்லை, ஒதுக்கி வைக்கப்படுவர்.
இதிலும் இன்னும் விசேஷமாக சிறுபிள்ளைகளின் வார்த்தைகளை ஒருவரும் கவனிப்பதில்லை. பாதுகாக்கப் படுவார்களே தவிர இவர்கள் ஜனங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஜனம் சூழ்ந்த இடத்தில் தன் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் ஜெபிக்க கேட்ட போது அவர்களை அழைத்து தொட்டு ஆசீர்வதித்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிள்ளைகளை சீஷர்கள் தடுத்தனர். இயேசுவோ சீஷர்களை அதட்டி, பிள்ளைகளை அழைத்து பரலோக ராஜ்யத்திற்கு ஒப்பிட்டு பேசி அவர்களை ஆசீர்வதித்தார்.
உங்களையும் ஒருவரும் மதிக்கவில்லையோ கண்டுகொள்ளவில்லையோ, நீங்களும் இயேசுவிடம் செல்லும் போதும் அவருக்காக செயல்படும் போதும் அநேகர் மற்றும் விசுவாசிகளும் தடுக்கின்றனரோ, கவலைப்படாதிருங்கள்! இயேசு உங்களுக்காக வழக்காடுவார். அதே ஜனத்தின் மத்தியில் உங்களை தொட்டு ஆசீர்வதிப்பார். ஆமென்...
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவானவர் மட்டுமே தன்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை. தன் ஆஸ்திகள் அனைத்தையும் அழித்த கெட்டக் குமாரனை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தவர். உங்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. அவரையே மீண்டும் நம்பி செல்லுங்கள். உங்களை அனைவர் மத்தியிலும் மீண்டெடுப்பார்...
More
இந்த திட்டத்தை வழங்கிய கடவுளின் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/kog.vlog
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

விசுவாசம் vs பயம்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
