வெற்றிக்கான தேவ பாதைமாதிரி

அநேகம் பேர் வெற்றியை சரியாக கற்பனை செய்வதில்லை. அவர்கள் வெடிகளையும், மினுமினுப்பையும், அரங்கம் அதிரும் கரகோஷங்களையும் எதிர்பார்க்கிறார்கள். நமது சினிமாத் துறையும் சமூக வலைதளங்களும் தொழில் முறை விளையாட்டுகளும் வெற்றிக்கான மாயையான பிம்பத்தை உருவாக்கி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பொய்யான வெற்றிக்கான எதிர்பார்ப்பு உண்மையான வெற்றி வரும்போது தவற வைக்கிறது. அல்லது நமக்கு கிடைத்த வெற்றியை சரியாக கொண்டாட முடியாமல் செய்கிறது. அதை கண்டு கொள்ள தவறுவதால், அடுத்த பெரிய காரியத்தை துரத்த ஆரம்பிக்கிறோம். அடுத்த காரியம் அதற்கடுத்த காரியம். நம்மை நாமே இந்த வாழ்வின் எலிப்பந்தயத்தில் வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
நாம் பாழடைந்த உலகத்தில் வாழ்கிறோம், பாவம் மற்றும் அதின் விளைவுகளால் கறைபட்டு, வெற்றியின் பல மைல்கற்கள் எல்லாம் முடிந்ததும் கசப்பான இனிப்பாக இருக்கிறது. ஆவிக்குரிய வெற்றியின் இயல்பை புரிந்து கொள்ளவில்லை என்றால், நமக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒன்றுக்காக முடிவில்லா தேடுதலில் சிக்கிக்கொள்வோம். இராஜ்ஜியத்தின் வெற்றியைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், நமது நேரத்தை, தாலந்துகளை, பொக்கிஷங்களை எப்படி முதலீடு செய்வது என அறிந்து கொள்ள முடியாது. நாம் என்ன விதைக்கிறோம் என்பதே நாம் என்ன அறுப்போம் என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் நாம் உண்மையான வெற்றி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாததால் பிசாசு நம்மை தவறான காரியங்களை விதைக்க வைக்கிறான்.
கடந்த சில வருடங்களில் நீங்கள் விதைத்த மிக சிறந்த மூன்று காரியங்கள் அல்லது தரிசனங்கள் என்ன?
அவை என்ன பலனை ஈந்தது, அவை தேவ ராஜ்ஜியத்தின் சித்தத்தோடு ஒத்துப் போகிறதா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

எல்லோரும் வெற்றி அடைய விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் வெற்றி அடைவதில்லை ஏனெனில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தவறான அர்த்தம் கொடுத்து அதை பின் தொடர்கிறார்கள். உண்மையான வெற்றியை அடைய உங்களை பார்வை தேவன் எதை வெற்றி என்று நிர்ணயிக்கிறாரோ அதின்மேல் இருக்க வேண்டும். மிகச்சிறந்த எழுத்தாளரான டோனி இவான்ஸ் அவர்கள் இத்திட்டத்தில் உண்மையான இராஜ்யத்தின் வெற்றி எது என்பதையும் அதை எப்படி அடைவது என்பதையும் விளக்குகிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்
