திட்ட விவரம்

தேவனுடைய சர்வாயுதவர்க்கம்மாதிரி

The Armor of God

5 ல் 4 நாள்

பெரும்பாலான சிறுவர்கள் "திருடன் காவலர்" விளையாட்டு விளையாட விரும்புகிறார்கள். ஆனாலும், சிறுவர்களின் சண்டைகள் உண்மையான ஆயுதங்களால் உண்மையான யுத்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உதாரணமாக, எரியும் அம்புகளைப் பயன்படுத்தி ஆச்சரியமான தாக்குதல்களை நடத்தும் எல்லைப்புற நடைமுறையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தந்திரமான திட்டம் மறுபுறம் பாதுகாப்பைப் கொண்டது. அக்கினி அம்புகள் துணிகளால் சுற்றப்பட்ட இடத்திலிருந்து தீ பிடிக்க தொடங்குகிறது, இராணுவக் கோடுகளை சீர்குலைத்து, தாக்குதல் நடத்தும் எதிரியைக் காட்டிலும் செலுத்துவோர் தீயில் கவனம் செலுத்துகிறார்கள்.



எரியும் அம்புகள் முதன்மையாக கொல்லவோ அழிக்கவோ இல்லை; அவை திசைதிருப்பவே.



உங்கள் எதிரி உங்களை திசை திருப்ப விரும்புகிறான், சகோதரி. இதன்மூலம் உங்களை திசை திருப்ப முடியும். நான் சொல்வதைக் கேளுங்கள் - அவன் தனது அம்புகளை கண்மூடித்தனமாக சுடவில்லை. அவன் திட்டங்களை வகுத்துள்ளன். அவன் உங்கள் போக்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள், உங்கள் பயங்கள் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்து, குறிப்பாக அந்த பகுதிகளை குறி வைக்கிறான். நீங்கள் இயேசுவில் நித்தியமாக காக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் நெருப்புகளை எரிவதன் மூலம் உங்கள் கவனத்தை திருப்ப அவன் விரும்புகிறான்—பாதுகாப்பின்மை, மிரட்டல், பதட்டம், கவலை அல்லது வேலை பழுவினால் நேரம் இல்லாமல் இருப்பது போன்றவை. அவன் பின்னால் இருந்து செயல்படும்போது நீங்கள் கவனம் செலுத்தக்கூடாது என்று அவன் விரும்புகிறான்.



எபேசியர் 6, பவுல் இடை கச்சை, மார்பகம் மற்றும் காலணிகளை ஒரு ஆவிக்குரிய சீருடையாக எல்லா நேரங்களிலும் விசுவாசிகள் அணிய வேண்டும் என்று தெரிவிக்கிறார். நிமிடத்திற்கு நிமிடம். நாளுக்கு நாள். விசுவாசத்தின் கேடயத்துடன், அதை "எடுத்துக்கொள்ள" அவர் கட்டளையிடுகிறார்.



இதை இந்த வழியில் பாருங்கள்: ஒரு செவிலியர் வேலை செய்ய ஒவ்வொரு நாளும் ஸ்க்ரப் அணியக்கூடும், ஏனெனில் அது அவளுடைய சீருடை. ஆனால் தேவை ஏற்படும் போது, ​​அவள் ஒரு ஸ்டெதாஸ்கோப், இரத்த அழுத்த இயந்திரம் அல்லது தனது நோயாளிக்கு பயன்படுத்த தேவையான கருவிகளை எடுத்துக்கொள்வார். அதேபோல், நாம் எப்போதும் நம்முடைய தினசரி, ஆவிக்குரிய சீருடையை அணிய வேண்டும், ஆனால் தேவைப்படும் போது மற்றவைகளை "எடுத்துக்கொள்ள" தயாராக இருக்க வேண்டும்.



இந்த கவச ஆடையில் முதலாவது விசுவாசத்தின் கேடயம். அக்கினி அம்புகள் நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வழியில் ஊடுருவி வருவதை நாம் முதலில் உணரும் போது, விசுவாசத்தை நம் வாழ்வின் பாதுகாப்புக் கவசமாக செயல்படுத்துகிறோம்.



முரண்பாட்டை இங்கே தவறவிடாதீர்கள். விசுவாசத்தில் நடக்க நீங்கள் அழைக்கப்படும்போது சத்துரு உங்கள் வாழ்க்கையில் அக்கினி அம்புகளை அனுப்புகிறான். அந்த அம்புகள் வேண்டுமென்றே அவற்றை அணைக்க சக்தி கொண்ட ஒரே காரியத்தைச் செய்வதிலிருந்து உங்களை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: அது விசுவாசத்தில் நடப்பதே!



விசுவாசம் அம்புகளைத் தூண்டிவிடுகிறது. தேவன் என்ன செய்யச் சொல்கிறார்? விசுவாசத்தில் நடங்கள்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Armor of God

தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி - கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக பிரிசில்லா ஷிரேர் மற்றும் Lifeway கிறிஸ்தவ வளங்கள்-க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு www.lifeway.com/ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்