திட்ட விவரம்

தேவனுடைய சர்வாயுதவர்க்கம்மாதிரி

The Armor of God

5 ல் 3 நாள்

ஒரு ரோமானிய சிப்பாய் பெல்ட்டை விட அவன் இடுப்புக்கு ஏற்ற ஒன்றைக் கொண்டு இடுப்பைக் கட்டி கொண்டான். (அழகான ஒன்று). சிப்பாயின் ஆடையில் அல்லது அவன் உபகரணங்களில் வேறு எந்த பகுதியையும் விட, இந்த இடுப்புக் கச்சை அதன் சிக்கலான அலங்காரத்துடனும் விரிவான கொக்கிகளுடனும் - ஒரு சிப்பாய் ஒரு குடிமகனிடமிருந்து வேறுபடுத்தியது என்பதை பெரும்பாலான வேத வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இடைக் கச்சை நீங்களோ அல்லது நானோ அலங்காரத்திற்காக சேர்க்கக் கூடிய அத்தியாவசியம் அற்ற பொருளல்ல. இந்த இடைக் கச்சை சிப்பாயின் உடையின் ஒரு மையப் புள்ளியாக இருந்தது. கனமான பொதிகளைச் சுமக்கும்போது ups மற்றும் fedex தொழிலாளர்கள் இடுப்புச் சுற்றி அணிந்திருக்கும் பெரிய இடுப்புக் கச்சைகளைப்(பெல்ட்) பற்றி சிந்தியுங்கள்.



ரோமானிய சிப்பாயின் துணிவுமிக்க, தோல் கவசம் உடற்பகுதியைச் சுற்றி வந்து அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்காக செய்யப்பட்டது, அதன் மூலம் அவர் போரில் விரைவான, தேவையான செயல்களை நிகழ்த்தினார். சத்தியம் தான் உங்கள் ஆதரவு. நீங்கள் ஆவிக்குரிய போராட்டத்தின் நடுவில் உங்களுக்குத் தேவையான ஆதரவை இது தருகிறது.



நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எதிரியின் ஆயுதம் மோசம் போக்குதலே. அவன் யதார்த்தங்களை கவர்ச்சி மிகு வார்த்தைகளால் அலங்கரித்து, யதார்த்தங்களை விட்டு நம்மை வழி விலகப் பண்ணுகிறான். அவன் கற்பனைகளை பரப்புகிறான், தற்காலிக மற்றும் முக்கியமற்ற விஷயங்களை எப்படியாவது மிகவும் முக்கியமானதாகவும் சாதகமானதாகவும் தோன்றப் பண்ணுகிறான்.



சத்தியம் என்னவென்று நாம் அறியாதவரை அவனது செயல்களெல்லாம் அழகாக நமக்குத் தோன்றும் - நாம் எளிதில் அவனது சூழ்ச்சிக்கு இரையாகிறோம்.



நம்மைப் பொறுத்தவரை சத்தியம் என்பது எந்த ஒரு விஷயத்திலும் தேவனின் கருத்து. சத்தியம் என்பது தேவன் யார், தேவன் என்ன சொல்கிறார் என்பதே, இது நமக்கு இயேசு கிறிஸ்துவில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. தேவனின் சத்தியம். வேதத்தின் சத்தியம். இந்த சத்தியத்தில் - மெய்யான சத்தியத்தில் - உறுதியான விசுவாசமும் உறுதியும் இல்லாததால் பலவீனமானவராகவும் சரியற்றதை சரியானதாகவும், மிகவு‌ம் சரியானதாகவும் தோன்ற செய்கிறது. உங்கள் லட்சியங்கள், தேர்வுகள் மற்றும் உணர்வுகள்; உங்கள் மனம், விருப்பம் மற்றும் உணர்ச்சிகள் இவை அனைத்தும் சரியாக இருக்கும் வரை - சத்தியத்தின் மூலம், உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரிசெய்யலாம். உங்களிடம் உறுதியான, நிலையான, ஒன்று இருக்கும் போது, எதிரியின் புத்திசாலித்தனமான பொய்களால் உங்களை வழி தப்ப செய்ய முடியாது. சத்தியத்துடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், மேலும் “செல்” என்ற வார்த்தையிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.



நமது கலாச்சாரத்தின் கொள்கைகளும் தத்துவங்களும் எதிராக இருக்கும்போது உண்மையான சோதனை வரும், ஆனாலும் நாம் வலுவாகவும் உறுதியாகவும் தேவனின் நிலையில் தேர்வு செய்கிறோம். சத்தியத்தில் கட்டப்பட்ட பெண்களாக நாம் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Armor of God

தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி - கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக பிரிசில்லா ஷிரேர் மற்றும் Lifeway கிறிஸ்தவ வளங்கள்-க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு www.lifeway.com/ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்