நம் மத்தியஸ்தராகிய இயேசுவை பின்பற்றுதல்மாதிரி
இயேசுவும் பாவிகளும்
மன்னிக்க முடியாத பாவி என்று இயேசு யாரையும் நினைத்ததில்லை. சமுதாயத்தின் அனைவராலும் துச்சமாக நினைக்கப்பட்டவர்களையும் கூட இயேசு வரவேற்றார்.
ஆப்பிரிக்க ஆய்வு வேதாகமத்தில்"மன்னிப்பின் வாசனை" என்ற தலைப்பின் கீழ் உள்ள குறிப்பில் இப்படியாக சொல்லப்படுகிறது:
தேவன் சொல்லும் விதத்தில் வாழுவதில் நாம் அனைவரும் தவறுகிறோம். நம் பாவங்கள் மற்றவர்களை காயப்படுத்துகின்றன, சில வேளைகளில் அந்த காயங்கள் ஆழமானவை. உண்மையான விசுவாசிகள் தேவனாலும் நாம் காயப்படுத்தின நபராலும் மன்னிக்கப்பட ஏங்குகின்றனர்.
இந்த சம்பவத்தில், பாவியான பெண் ஒருவர் எப்படியாவது மன்னிப்பு கிடைக்க வேண்டுமென்று, ஒரு முக்கியமான மதத்தலைவரின் வீட்டிற்குள் செல்ல கூட தயங்கவில்லை. அவள் அழைக்கப்படவில்லை, அவளுக்கு தகுதியில்லை, அவள் வரவேற்கப்படவில்லை. தாழ்மையாக, இயேசுவுக்கு முன் அடிபணிந்தாள். அழுதாள். அவள் கண்ணீர் சொட்டுகள் அவர் பாதங்களில் விழுந்தன, அவர் பாதங்களை முத்தமிட்டு, தன் முடியைக் கொண்டு கண்ணீரை துடைத்தாள். அவர் பாதங்களில் விலையுயர்ந்த நறுமணத்தைலத்தை அவள் ஊற்றியப்போது, அந்த அறை முழுவதும் நறுமணத்தால் நிரம்பியது.
நாம் மற்றவர்களுக்கு எதிராக தவறு செய்யும் போது, அவர்கள் நம்மை மன்னிக்கலாம், மன்னிக்காமலும் இருக்கலாம். ஆனால், நம் பாவங்களை குறித்து மனம் உடைந்தவர்களாக, தாழ்மையுடன் நாம் இயேசுவின் பாதத்தில் அடிப்பணிந்தால், அவர் நம்மை தள்ளி விட மாட்டார். "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று நம்மிடம் கூறுகிறார்.
சிந்தித்து கலந்தாராய்வு செய்ய
இந்த சம்பவத்தில் உள்ள பெண் ஒரு மிகவும் பாவம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தாள், தேவனின் பார்வையில் மிகவும் பொல்லாப்பானதை செய்திருந்தாள். இயேசு அவளை ஏன் மன்னித்தார் என்று நினைக்கிறீர்கள்?
நீங்கள் தேவனின் பிள்ளை என அழைக்கப்பட தகுதியுடையவராக உணருகிறீர்களா? உங்கள் பதிலுக்கான காரணம் என்ன?
உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்தால் அவர் உங்களை மன்னிப்பாரா? இயேசு நம்மை மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருப்பதைப் பற்றி இந்த சம்பவம் நமக்கு என்ன கற்பிக்கிறது?
அந்த மன்னிப்புக்கு நாம் எப்படி பதில் செய்ய வேண்டும்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சாலை ஓரத்திலிருந்து நம்பிக்கையின்றி கதறும் கண்பார்வையற்ற பிச்சைக்காரன், அசிங்கம் என்று சொல்லி கலாச்சாரத்தால் துச்சமாக எண்ணப்படும் ஒழுக்கமற்ற பெண், அனைவராலும் வெறுக்கப்படும் ஊழல் பேர்வழியான அரசாங்க பணியாளர் -- சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கும் இப்படிப்பட்ட மக்கள் ஒரு பரிசுத்தமான தேவனுடன் உறவுக்கொள்ள எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆப்பிரிக்க ஆராய்வு வேதாகமத்தில் லூக்கா புத்தகத்திலுள்ள கருத்துகளை சார்ந்த இந்த வாசிப்பு திட்டத்தில், தேவனுக்கும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இயேசு பாலம் அமைப்பதை பின்தொடருங்கள்.
More