திட்ட விவரம்

நம் மத்தியஸ்தராகிய இயேசுவை பின்பற்றுதல்மாதிரி

Following Jesus Our Mediator

7 ல் 2 நாள்

இயேசுவும் ஏழைகளும்


ஆவிக்குரிய ஏழ்மை, பொருளாதார ஏழ்மை என பல வடிவங்களில் ஏழ்மை காணப்படுகிறது. எந்த விதத்திலும் ஏழ்மையாக இருப்போரிடம் இயேசு சென்றார்.



ஆப்பிரிக்க ஆராய்வு வேதாகமத்தில் "ஆவியில் ஏழ்மை" என்ற தலைப்பிலுள்ள குறிப்பில் இப்படியாக சொல்லப் படுகிறது:


இயேசு பிரசங்கிப்பதை கேட்க பல ஏழை மக்கள் கூடியிருந்தனர். வாழ்வதற்கு தினசரி உதவி தேவை என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுடைய கவனம் இயேசுவின் மேல் இருந்தது; சந்தோஷம், சுகம், தேவனின் முழு ஆசீர்வாதம் ஆகியவற்றை குறிக்கும் தேவ ராஜ்யத்தை அவர்களுக்கு அவர் வாக்களித்தார். அதனை பெற்றுக்கொள்ள, அவர்களுக்கு அவர் தேவை என்பதை அவர்கள் உணர வேண்டியிருந்தது. தங்கள் சொந்த ஏழ்மை நிலையை உணர்ந்தவராய் தேவனிடம் வருவது அனைவருக்கும் தேவையானது என்பதற்கு எடுத்துக்காட்டாக இயேசு ஏழைகளை உபயோகித்தார்.  



சரீரப்பிரகாரமாக குறைவுள்ள மக்கள் அனேக நேரங்களில் குறைந்த மன உறுதி கொண்டவராகவும் எதையும் செய்ய உற்சாகம் இல்லாதவராகவும் இருப்பர். உற்சாகமின்றி உணர்வார்கள்; வாழ்வதற்கு காரணமில்லாமல் கூட உணரலாம். இன்னும் மோசமாக, அப்படிப் பட்ட மக்கள் ஒரு அரசாங்க அமைப்பிலோ அல்லது சமூக அமைப்பிலோ நம்பிக்கை வைக்க முடியாது என்றும் உணர்வார்கள். ஏழ்மையின் மூலம் உலகமும் அதன் நீதியின்மையும் அவர்களது ஆவியை உடைத்து விட்டன. அப்படிப்பட்ட நம்பிக்கையற்ற நேரங்களில், மறுமலர்ச்சிக்கான நம்பிக்கையை தேவ ராஜ்ஜியம் மட்டுமே கொடுக்கிறது.  



தேவ ராஜ்ஜியம் ஏழைகளுக்கோ பணகாரர்களுக்கோ இல்லை, அவருக்கான தேவையை உணர்பவருக்கே. நாம் ஏழைகளாக இருந்தால், நமக்கு தேவன் எவ்வளவு தேவை என்பதை உணர வைக்க வாய்ப்பாக அமையும் ஏழ்மையை பற்றி நாம் நன்றாக தெரிந்திருப்பதை துச்சமாக நினைக்கக் கூடாது. நம் சொந்த தேவையை அறிந்திருக்கும் அந்த அறிவே பரலோக ராஜ்யத்தை நமக்கு சொந்தமானதாக சுதந்தரித்துக் கொள்ள வழி வகுக்கிறது.



சிந்திக்க அல்லது கலந்தாராய்வு செய்ய


உங்கள் வாழ்க்கையில் என்னென்ன விதங்களில் ஏழ்மை அல்லது அநீதியை அனுபவித்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்கையையும் நீங்கள் வாழும் விதத்தையும் இந்த அனுபவங்கள் எப்படி பாதித்துள்ளன



தேவ ராஜ்ஜியம் பணக்காரர்கள் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல என்பது எந்த விதத்தில் முக்கியம்?



இந்த உலகத்தின் அநீதிகள் மற்றும் ஏழ்மை நிலைகள் நமக்கு தேவன் தேவை என்பதை எப்படி காட்ட முடியும்?



அநீதியை சந்திக்கும் நமக்கு இயேசுவின் வார்த்தைகள் எந்த விதங்களில் நற்செய்தியாக இருக்கின்றன?


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Following Jesus Our Mediator

சாலை ஓரத்திலிருந்து நம்பிக்கையின்றி கதறும் கண்பார்வையற்ற பிச்சைக்காரன், அசிங்கம் என்று சொல்லி கலாச்சாரத்தால் துச்சமாக எண்ணப்படும் ஒழுக்கமற்ற பெண், அனைவராலும் வெறுக்கப்படும் ஊழல் பேர்வழியான அரசாங்க பணியாளர் -- சமுதாயத்தின...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக Oasis International Ltd க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://Oasisinternationalpublishing.com க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்