இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி

அமைதி
இன்றைய நாள் வேதத்தில் பதிவிடப்படாத காரியங்களைக் குறித்து சிந்திக்கும் ஒரு சுவாரஸ்யமான நாள். அமைதி.
தேவனுடைய அமைதியினால் நீங்கள் எப்பொழுதாவது குழப்பமடைந்திருக்கிறீர்களா? அவருடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்குமென்ற நிச்சயமில்லாமல் இருந்திருக்கிறீர்களா?
நீங்கள் தனியாக இல்லை. காத்திருத்தல் மற்றும் தேவனுடைய வழிகளை அநேக நேரங்களில் நம்மால் உடனடியாக புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏசாயா 55:8-9 தெளிவாகச் சொல்கிறது, “’என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” என்று.
வேதத்தில் பதிவிடப்படாமல் விட்டுவிடப்பட்ட நாட்கள் மற்றும் விவரங்களைக் குறித்து சிந்திக்கும்போது, மக்கள் என்ன செய்துகொண்டிருந்திருப்பார்கள்? என்ன நினைத்திருந்திருப்பார்கள்? என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்? என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் என் ஆர்வத்தைத் தூண்டுகிறதாயிருக்கும்.
இன்று நான், நம்மை அவர்கள் இடத்தில் வைத்துப் பார்க்கும்படியாய் விரும்புகிறேன், அவர்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருந்திருக்கக்கூடிய ஒரு சங்கீத்த்தை நாம் இன்று வாசிக்கப் போகிறோம்:
சங்கீதம் 139 ஐ வாசியுங்கள்.
இப்பொழுது சிறிது நேரமெடுங்கள், தேவன் உங்களை ஆராய்ந்துப் பார்த்து, உங்களை அறிந்துகொள்ளட்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சமாதானத்தை நாடுதல்

எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்

இயேசு: நம் ஜெயக்கொடி

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

சிலுவையும் கிரீடமும்

சமூக மாற்றம் பற்றிய ஒரு வேதகாமப் பார்வை

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
