இதன் மூலம் கடவுளைத் தேடுமாதிரி

கடவுளைத் தேடுவது முக்கியம். ஆனால் யாரையாவது அல்லது எதையாவது தேடுவதற்கு, அவர் பண்புகளைப் பற்றி உங்களுக்கு ஒரு யூகம் இருக்க வேண்டும். கடவுளைப் பற்றியும் அப்படித்தான். கடவுளின் பண்புகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.
நாம் தேவாலயத்தில் கேட்டதையோ அல்லது மற்றவர்கள் சொல்வதைக் கேட்டதையோ அடிப்படையாக வைத்து அவர் யாரென்று சாதாரணமாகப் தேட முடியாது.
கடவுள் ஒரு வழங்குபவர், ஆறுதல் அளிப்பவர், அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார், அவர் நம்மைப் பார்க்கிறார், அவருடைய பிரசன்னம் நமது உயிர்நாடி என்று எந்த வித சந்தேகமும் இல்லாமல் நாம் உறுதியாக நம்பும்போது, அந்த வெளிப்பாட்டின்படி செயல்படுவோம்.. இப்போது, பலர் கவலை, மனச்சோர்வு மற்றும் விட்டுக்கொடுப்பு உணர்வுகளுடன் போராடினாலும், அவர்கள் உறுதியாக இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், நமது சரும நிறத்தைப் பற்றி நாம் எப்படி நம்புகிறோமோ, அதே முறையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், நாம் ஒரு குறிப்பிட்ட நிறம் இல்லை என்று யாராலும் நம்மை நம்ப வைக்க முடியாது. சந்தேகத்திற்கு இடமின்றி, நம் தோலின் நிறம் நமக்குத் தெரியும். துடிக்கும் இதயமும் மூளையும் நமக்குத் தெரியும். யாரும் மற்றும் எதுவும் நம்மை வேறுவிதமாக நம்ப வைக்க முடியாது.
கடவுள் அவர் யார் என்று கூறுகிறாரோ, அவர்தான் என்பதை நாம் அதேபோல நம்ப வேண்டும். கடவுளின் வாக்குறுதிகள் இன்றும் பொருத்தமானவை மற்றும் செயலில் உள்ளன.
நாள் 6:
- கடவுள் யார் என்பதை தியானியுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி

மனச்சோர்வு. கவலை. தூண்டுதல்கள் மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நம்மை மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியாக பாதிக்கின்றன. இப்படிப்பட்ட காலத்தில் கடவுளைத் தேடுவது கடினமானதாகவும் தேவையற்றதாகவும் தெரிகிறது. "இதன் மூலம் கடவுளைத் தேடு" என்ற திட்டம், உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், கடவுளின் அமைதியை நீங்கள் அனுபவிப்பதற்காக, கடவுளின் முன்னிலையில் எவ்வாறு செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கவும் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

வனாந்தர அதிசயம்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்
