திட்ட விவரம்

ஒற்றுமையின் வலிமைமாதிரி

The Power of Unity

4 ல் 3 நாள்

ஒற்றுமையின் எதிரி



நம்முடைய தேசத்தந்தையான மகாத்மா காந்தியடிகள் தன்னுடைய சுயசரிதையில் ஒரு சம்பவத்தை குறிபிட்டுள்ளார். தன்னுடைய கல்லூரி நாட்களில் இயேசுவின் போதனைகளை இவர் அறிந்துக்கொள்ளும்படியான ஒரு வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் ஜாதிய வேறுபாடு, ஜாதிய அடிமைத்தனம் தலைவிரித்தாடியது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்கள், படித்து வாழ்கையில் உயர நினைத்தாலும் அவர்களால் உயரமுடியாதவகையில், மேல்ஜாதி மக்கள் அவர்களை தாழ்ந்தவர்கள் என்ற போர்வையில் அடைத்து அடிமைபடுத்தி வைத்திருந்தார்கள். அப்படி ஒரு சூழலில், இயேசுவினுடைய போதனைகளை கேள்விப்பட்ட இவர், இந்தியாவில் அப்போது நிலவி வந்த ஜாதிய அடிமைத்தனத்திற்கு இயேசுவின் போதனைகள் தீர்வாக அமையும் என்று எண்ணினார்.



இயேசுவின் போதனைகளை குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக அருகாமையிலிருந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்கு சென்றுள்ளார். ஆனால், அவர் ஆலயத்தில் பிரவேசித்த மாத்திரத்தில், அங்கிருந்த ஊழியர் ஒருவர் அவரை தடுத்தி, "நீங்கள் எங்களோடு சேர்ந்து ஆராதிக்க முடியாது. உங்கள் இன மக்களோடு சேர்ந்து கடவுளை ஆராதியுங்கள்" என்று கூறியுள்ளார். அன்று வெளியேறிய அவர், தனது வாழ்நாளில் மற்றுமொருமுறை அவர் தேவாலயத்திற்கு சென்றதே இல்லையாம். கிறிஸ்தவத்தில் ஜாதி வேற்றுமைகள் இருக்குமானால், எனக்கு கிறிஸ்தவம் வேண்டாம் என்று முடிவெடுக்க அந்த சம்பவம் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.



மகாத்மா காந்தியின் இந்த சம்பவத்திற்கு காரணம், அந்த கிறிஸ்தவர் காண்பித்த "நாங்கள் உயர்ந்தவர்" என்ற மனநிலை. பிறரை காட்டிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமே, நாம் மற்றவரை தாழ்வாக நினைத்து உதாசீனபடுத்த காரணமாகிவிடுகிறது. பிறர் வாழ்வில் நியாதிபதியை போல் அமர்ந்துகொண்டு அவர்களில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து நியாயம் தீர்க்கும் மனநிலையும் இங்கிருந்து தான் துவங்குகிறது. இந்த மனநிலையினால் நாம் பிறரை தவறாக அல்லது வேதத்திற்கு புறம்பான காரியங்களை மையமாக கொண்டு நியாயம் தீர்த்துவிடுகிறோம். நிறம், இனம், ஜாதி, கலாச்சாரம் ஆகியவற்றை மையபடுத்திய முறையற்ற வேற்றுமை உணர்வுகள் மக்களிடையே பெருகியிருக்கிறது. "நாங்கள் தான் உயர்ந்தவர்கள், நாங்கள் தான் சரியானவர்கள்" என்ற மனநிலையே ஒற்றுமையின் எதிரியாக நான் காண்கிறேன். தேவனுடைய சரீரமாகிய சபைக்கு இருக்க வேண்டிய அன்பை இந்த உணர்வு கெடுத்துப்போடுகிறது. நாம் அன்பை மையமாக கொண்டே செயல்பட அழைக்கபட்டிருக்கிறோம். ஜாதி, மொழி, வசதி, கலாச்சாரம் என நம்மை காட்டிலும் வேறுபட்டிருக்கும் மக்களையும் நாம் இயேசு நம்மிடம் காண்பித்த அன்பை கொண்டு நேசிக்க கடமைபட்டிருக்கிறோம். இப்படிப்பட்டவர்களுடைய தேவைகளை நம்முடைய சொந்த தேவைகளை காட்டிலும் பிரதானபடுத்தி நாம் நமது அன்பை காண்பிக்க வேண்டும்.



உங்களை காட்டிலும் பலவிதங்களில் வேறுபட்டிருக்கக்கூடிய மக்களிடம் நீங்கள் எந்தெந்த வகையில் உங்கள் அன்பை காட்ட முடியும்?


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Power of Unity

மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ...

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக Dr. டோனி இவான்ஸ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களை அறிய https://tonyevans.org/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்