திட்ட விவரம்

ஒற்றுமையின் வலிமைமாதிரி

The Power of Unity

4 ல் 2 நாள்

ஒற்றுமையின் முழுஉருவம்



ஒரு காரியத்தை குறித்து பேசும்போது அந்த காரியத்திற்கான சிறந்த உதாரணமாக சொல்லக்கூடிய ஒருவரையே அந்த காரியத்தின் "முழு உருவம்" என்று சொல்லுவோம். உதாரணத்திற்கு இயேசுவை அன்பின் முழு உருவமாக சொல்லுவோம். அதே போல "ஒற்றுமையின் முழுஉருவம்" என்றால் நீங்கள் யாரை சொல்லுவீர்கள்? இந்த கேள்வியை கேட்ட மாத்திரத்தில் உங்கள் சிந்தைக்கு வருபவர் யார்?



ஒற்றுமைக்கு அநேக மனித உதாரணங்களை நம்மால் கூற முடியும். ஆனால், அனைவருமே பூரணர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், நாம் எவருமே பூரணர்கள் இல்லை, குறைகள் கொண்ட மனிதர்கள் தான். ஆனாலும், ஒற்றுமைக்கு குறைகள் அற்ற ஒரு பூரண உதாரணத்தை நாம் திரித்துவத்தில் காணலாம். மெய்யான ஒரே தேவனின் மூன்று தனித்துவங்களை குறிப்பது தான் திரித்துவம்: பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர். மூவருமே தேவன் தான். ஆனாலும், மூவருக்கும் தனித்துவமான செயல்பாடுகள் இருக்கின்றன. ஆகிலும், மூவரும் ஒன்றாகவே இருக்கின்றனர், பூரண ஐக்கியத்தில்செயல்படுகின்றனர். திரித்துவம் என்பது மூன்று கடவுள்கள் என்பதல்ல. மூன்று ஆளுமைகளும் ஒன்றாகவே ஐக்கியப்பட்டு இணைந்து ஒரே தேவனாக செயல்படுகின்றனர்.



இங்கே நன்றாக ஒரு விஷயத்தை கவனியுங்கள்: பூரண ஒற்றுமை என்பது மற்றவரின் தனித்துவத்தை நிராகரிப்பது இல்லை. திரிதுவத்தில் மூவருக்குமே வெவ்வேறு செயல்பாடுகள் இருக்கின்றன. தேவனுடைய தமது ஈடில்லாத ஞானத்தினால், அவர் குணாதிசயத்தை இந்த பூமியில் பிரதிபலிக்க மனிதர்களை படைத்தார். எனவே தான் மனிதர்களை வெவ்வேறு தன்மைகளுடன், குணங்களுடன், திறமைகளுடன் இந்த பூமியில் படைத்தார். ஒருவர் மற்றவரிடம் இருந்து வேறுபட்டு தனித்துவத்துடன் இருப்பதே தேவனின் சித்தம் - அது அவரது படைப்பின் முறையில் தெரிகிறது. வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உருவங்களில், வெவ்வேறு அமைப்புகளில் மனிதர்கள் படைக்கப்பட்டு இருந்தாலும், அவர்களில் ஒருவரும் மற்றவரை விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. அனைத்துவித மக்களுடைய தனித்துவத்தையும் தேவன் விசேஷமாக படைத்திருக்கிறார். ஆனாலும், இந்த இத்தனை வேற்றுமை கொண்ட அவரது பிள்ளைகள், தங்களது வேற்றுமைகளிலும், ஒன்றிணைந்து ஒருவராக ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஒற்றுமையாக இருந்தாலும், நமகென்று தேவன் தந்த அந்த தனித்துவத்தையும் விடாதிருக்கவும் தேவன் விரும்புகிறார். இதற்கான சிறந்த உதாரணமான திரித்துவத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.



தேவனுடைய ஒற்றுமையின் உதாரணத்தை உங்கள் வாழ்கையில் நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்க விரும்புகிறீர்கள்.


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Power of Unity

மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ...

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக Dr. டோனி இவான்ஸ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களை அறிய https://tonyevans.org/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்