திட்ட விவரம்

நிச்சயமற்ற காலங்களில் உறுதிமாதிரி

Certainty In Times Of Uncertainty

5 ல் 4 நாள்

காரியங்கள் எப்பொழுதும் நமது திட்டங்களின்படி நடப்பதில்லை, ஆனால் அவை எப்போதும் தேவனின் திட்டங்களுக்குக் கட்டுப்படும்.



இருப்பினும், சாலையில் எந்த தடையும் இல்லாமல் வாழ்க்கை நகர்வதில்லை. இந்த தடைகளில் தோல்வி காணப்படுவதில்லை, இந்த தடைகள் நம் பாதையில் நம்மை நிறுத்த அனுமதிக்கும் போதுதான் அது தோல்வியை கொண்டுவருகிறது. உங்கள் நோக்கத்திற்காக நீங்கள் சந்திக்கும் தாமதங்களுக்காக மிகவும் சோர்வடைய வேண்டாம். நமக்கு என்ன நடக்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, அதற்கு நம் பிரதிகிரியையை மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும். பாஸ்டர் சார்லஸ் ஆர். ஸ்விண்டோல் ஒருமுறை சொன்னார், வாழ்க்கை என்பது பத்து சதவிகிதம் உங்களுக்கு நடக்கும் சம்பவங்கள், தொண்ணூறு சதவிகிதம் அதற்கு நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று.



உங்கள் மனநிலை ஒரு சக்திவாய்ந்த விஷயம். வெற்றிகரமான நபர்கள் வெற்றிபெற அவர்கள் திறமையானவர்கள் என்பது காரணமில்லை என்று நான் நம்புகிறேன். வெற்றிகரமான மனிதர்கள் வெற்றிபெற காரணம் அவர்கள் தோல்வியின் போதும் வெற்றிக்கான மனநிலையைக் கொண்டிருப்பது தான் என்று நான் நம்புகிறேன்.



பயணம் பாறையாக இருந்தாலும், அரங்கேறும் நிகழ்வுகளை நாம் நம்ப வேண்டும். நீங்கள் வாழ்வதற்காக தேவன் உருவாக்கிய திட்டத்திற்காக அவர் உங்களை மேம்படுத்துகிறார். நாம் எதிர்கொள்ளும் இலக்குக்கு மனரீதியாக நம்மைத் தயார்படுத்துவதற்காக தேவன் நம்மை "பயிற்சி படிகள்" வழியாக வழிநடத்துகிறார் என்று நான் நம்புகிறேன்.



நிச்சயமற்ற காலங்களில் உறுதியாக இருப்பது என்பது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்குக் கண்மூடித்தனமாக இருப்பதைக் குறிக்காது. உங்களுக்கு பய உணர்வு இருக்காது என்று அர்த்தம் இல்லை, நாம் மனிதர்கள் மட்டுமே. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம், நம்மைச் சூழ்ந்திருக்கக்கூடிய பயம் மற்றும் எதிர்மறையின் மத்தியில் நம்பிக்கை வைத்திருக்க விரும்புகிறோம் என்பதே இதன் பொருள். நம் மனதில் பயம் இருந்தாலும், நாம் தொடர வேண்டிய அனைத்தையும் தேவன் நமக்கு தருவார் என்பதை அறிவோம்.



நிச்சயமற்ற வேளைகளில் உங்கள் வேதாகமம் உறுதியானது.



தேவன் உறுதியானவர்.



இயேசு தீர்மானித்து விட்டார்.



நாம் அளவுக்குட்பட்ட உலகத்தில் ஒருவேளை வாழலாம் ஆனால் நாம் அளவற்ற தேவனை சேவிக்கிறோம்.


வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Certainty In Times Of Uncertainty

நிச்சயமற்ற நிலைமைகளிலும், நிச்சயமானவராய் இருக்கும் தேவன்! நாம் சகோதரர் டேவிட் வில்லா அவர்களுடன் இணைந்து இந்த சமீபத்திய திட்டத்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர் மறையைக் கடந்து மிகவும் பெரிய சிறப்பான ஒன்றை அடைவதற்காக தியான...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, https://davidvilla.me/ க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்