மாற்றமடைந்து வாழுதல்: நோக்கம்

5 ன் 1 வது நாள் • இந்த நாள் வாசிப்பு

தியானத்திற்கு

நோக்கத்திற்காக உருவாக்கபட்டேன்நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற பிறந்தவர்கள். நாம் அதை ஒப்புக்கொள்ளத் தேர்வு செய்யாவிட்டாலும், அல்லது அதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தேவன் ஒவ்வொரு நபருக்கும் அவரது தேவாலயத்தை வளர்க்க நம்மில் ஒவ்வொருவருக்கும் நம்பமுடியாத தனித்துவமான தாலந்துக்களால் வடிவமைத்தார். அதிர்ஷ்டவசமாக, தேவன் நம் இதயங்களில் தடயங்களை வைத்துள்ளார், மேலும், பரிசுத்த ஆவியின் மூலம், நமது நோக்கத்தைக் கண்டறிய வழிகாட்டுகிறார்.குழந்தைகளாகிய நமக்கு, பெரிய கற்பனைகள் உள்ளன. நாம் நம்மை ஒரு கதா-பாத்திரமாக பாவித்து இந்த முழு உலகத்திற்கு முன்பாக நம்மால் எல்லாம் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். வானமே எல்லை! எதற்கு பயப்பட வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ளவில்லை அல்லது நம்மால் முடியாது என்று நமக்கு கற்றுத்தரப்படவில்லை. நாம் இன்னும் வாழ்க்கையின் கடுமையான உண்மைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை அல்லது நமது நிலையைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் யார் என்பதில் நமக்கு நம்பிக்கை உள்ளது மற்றும் நமது கனவுகளை நிறைவேற்ற நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.எனது பொருத்தமான மேலாடையும் கீழாடையும் கொண்ட சூப்பர் ஹீரோ பைஜாமாவை போட்டுக்கொண்டு என் வீட்டின் முன்புறமாக விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. உலகை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் அதிசயப் பெண்ணாக அதாவது "Wonder Women" ஆகா நான் இருந்தேன்! நான் என் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு தாழ்வாரத்தில் காவலாக நிற்பேன், பிரச்சனையின் முதல் அறிகுறியில், காப்பாற்ற நான் குதித்து சென்றுவிடுவேன். நாள் முழுவதும் விளையாடினாலும், நான் சோர்வடையவே இல்லை.எனக்கு வயதாக வயதாக, ​​​​சிறு வயதில் எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஆசை இருந்தது என்று யோசித்தேன். ஒரு குழந்தையாக இருக்கும்போதே, தங்களால் தங்களுக்கு உதவ முடியாதவர்களுக்கு நான் உதவ விரும்பினேன் என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. ஒரு போதகராக, இன்றும் நான் செய்ய வேண்டியது இதுதான். மக்களை நரகத்தின் வாசலில் இருந்து மீட்க நான் அயராது உழைக்கிறேன். மக்களைக் காப்பாற்ற தேவன் என்னை இந்தப் பூமியில் வைத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆரம்பத்திலிருந்தே அந்த ஆசையையும் என்னுள் வைத்தார்.சிறு வயதில் நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். அதற்குப் பதிலாக, உங்கள் பொம்மைகள் அனைத்திற்கும் இரவு உறக்க நேர வழக்கத்தைப் பின்பற்றி இருக்கலாம் அல்லது கற்பிப்பதற்காக அடைத்த விலங்குகளின் வகுப்பை அமைத்து இருக்கலாம். ஒருவேளை நீங்கள் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது போல் நடித்திருக்கலாம், செய்திகளைப் புகாரளிதந்திருக்கலாம் அல்லது புதிய உலகங்களை ஆராய்ந்த்திருக்கலாம். சிறுவயதில் நீங்கள் கண்ட கனவுகள் எதுவாக இருந்தாலும், அவை தற்செயலாக உங்கள் இதயத்தில் இல்லை. தேவன் ஒரு நோக்கத்திற்காக அவைகளை அங்கே வைத்தார். உலகமானது உங்களது கற்பனைகளை நிராகரிக்கவேண்டும் என்று உங்களை நம்பவைத்திருந்தாலும், அவைகள் இன்னும் அங்கேயே இருக்கின்றன— தேவன் உங்களை எவ்வாற்றாக வனைந்தாரோ அவ்வாறே நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள்.உங்களுக்கான தேவனின் நோக்கம் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் என்ன கனவு கண்டீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களை கண்ணீருக்கு இழுக்கும் விஷயங்களைக் கவனியுங்கள், உங்கள் இதயக் கயிறுகளை இழுத்து, உங்களைத் தூண்டி, உங்களை நியாயமான கோபத்திற்குக் கொண்டு வரும் விஷயங்களை கவனித்துப் பாருங்கள். தேவனே அந்த விஷயங்களை உங்களுக்குள் வைத்தார், நீங்கள் மட்டுமே நிறைவேற்றக்கூடிய ஒரு நோக்கத்திற்காக உங்களை தனித்துவமாக உருவாக்கினார்.தேவனே, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு என்னை உருவாக்கியதற்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து, என் வாழ்க்கையில் உமது அழைப்பை நிறைவேற்ற எனக்கு தேவையானதை எனக்கு வழங்கியதற்கு நன்றி. நீர் என் இதயத்தில் வைத்திருக்கும் ஆர்வங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை எனக்கு வெளிப்படுத்தும், மேலும் அவற்றை தேவனுடைய ராஜ்யத்தின் மேன்மைக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை எனக்கு தெளிவாகக் கற்றுத்தரும். உமது சித்தத்தின்படி வாழவும் மற்றும் எனது சொல்லாலும், செயலாலும் எல்லாவற்றிலும் உமக்கு மகிமையைக் கொண்டுவரவும் எனக்கு உதவும். இயேசுவின் அருமையான பெயரில், ஆமென்.