20/20: பார்த்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டது. அனுப்பப்பட்டது. கிறிஸ்டின் கெய்ன் மூலம் மாதிரி

20/20: Seen. Chosen. Sent. By Christine Caine

7 ல் 6 நாள்

கர்த்தரின் இறுதி கட்டளையை தலையாய முதன்மை படுத்துங்கள்

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து”, “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார். மத்தேயு 28:19-20

இந்த வாசகங்கள் பலநேரங்களில் பரமகட்டளை என்றே குறிப்பிடப்படுகிறது ஏனெனில் தேவன் நம்மை “புறப்பட்டுப்போய், சீஷராக்குங்கள” என கட்டளை செய்கிறார். கர்த்தர் சோர்கத்திற்கு செல்லுவதற்கு முன்பாக பேசிய கடைசி வார்த்தைகள் இவையே என மத்தேயு பதிவு செய்கிறார்.

ஒருவர் உதிற்கும் இறுதிச்சொற்கள் எப்போதுமே முக்கியமானதாய் இருக்கும் அல்லவா? தங்கள் உயில் மற்றும் விருப்பாவணத்தை ஒருவர் எழுதும் போது, அவர்களது இறுதி அறிவுத்தல் மற்றும் நினைவுகள் எழுதுகின்றனர். அந்த வார்த்தைகள் நாம் எப்போதும் மறக்கமாட்டோம் அல்லவா?

 எனது 50வது பிறந்தநாள் கொண்டாடிய அதே நாள் என் தாயார் காலமானார். நிக் எனக்காக பல நண்பர்களுடன் மிகவும் அற்புதமான ஒரு கொண்டாட்ட விழா செய்திருந்தார், வீட்டிற்கு திரும்புகையில் எனது சகோதர் ஆன்டறூவிடமிருந்து பல தவறவிட்ட அழைப்புகளை கண்டேன், மேலும் “அம்மா சென்றுவிட்டார்” என்ற ஒரு உரை செய்தி. ஜார்ஜ் எனது மற்றோரு சகோதரர் அம்மாவுடன் அந்த நாள் முன்பாக பேஸ்டைம் செய்ய உதவி செய்ததை எப்போதும் நன்றியுடன் நினைவுகொள்வேன். கொண்டாட்டம் முடிந்தவுடன் திரும்ப கூப்பிட்டு எல்லா மகிழ்ச்சி பற்றிய முழுவிவரம் கொடுப்பேன் என அவரிடம் நான் சொல்லியிருந்தேன். அவரது கடைசி நினைவாக நான் கொண்டது எப்போதும் பொக்கிஷமாக இருக்கும்- அவரது முகத்தை பார்த்தது, அவரது இனிய புன்முறுவல், மற்றும் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள் “நான் உன்னை நேசிக்கின்றேன்” கேட்டது.

அவரது கடைசி வார்த்தைகளை நான் எப்படி போற்றிப்பேணிக்காமல் இருக்க முடியும்?

உங்களுக்கு யாரேனும் கடைசி வார்த்தைகள் கொடுத்துள்ளார்களா? அந்த கடைசி வார்த்தைகளில் ஒரு அறிவுறை இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த வார்த்தைகளில் “சகோதரனை கவனித்துக்கொள்,” அல்லது, “உனது அம்மாவை எனக்காக பார்த்துக்கொள்” போன்ற வேண்டுகோள் சேர்ந்திருந்தால் என்னவாகும்? அந்த கோரிக்கை உங்கள் வாழ்க்கை பணியாக மாறாதா? அந்த கோரிக்கையே உங்களது மிக பெரிய முதன்மையாகாதா?

 கர்த்தரின் கடைசி வார்த்தைகளை - அவரது இறுதி கட்டளை-நமது தலையாய முதன்மையாக கொள்ள சமயம் இதுவோ?

அவருடைய இரக்கம், வல்லமை, இருப்பு, உண்மை மற்றும் அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்காக நாம் கடவுளுக்கு நம் வாழ்க்கையை அர்ப்பணித்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? நாம் செல்லும் எல்லா இடங்களிலும், நாம் செய்யும் ஒவ்வொரு தொடர்புகளிலும், "கடவுளே, நான் முழுமையாகக் பயன்பட போகிறேன். என்னைப் பயன்படுத்துங்கள், இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள், மற்றவர்களை உங்களிடம் ஈர்க்க இந்த உரையாடலைப் பயன்படுத்துங்கள்? அந்த ஜெபத்திற்கு அவர் பதிலளிப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த உலகத்தில் அவரை அறியும்படி கடவுள் உங்களையும் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளார். இரண்டாம் திட்டம் எதுவும் இல்லை. நாம் தான் கடவுளின் அவரே திட்டம். நாம் சென்று அவருடைய கடைசி கட்டளையை நமது முதன்மையானதாக ஆக்குவோம்.

பிரார்த்தனை

கடவுளே, இன்று நான் எங்கு சென்றாலும், நான் முழுமையாக பயன்பட இருக்கிறேன். ஒவ்வொரு தொடர்புகளிலும், ஒவ்வொரு சந்திப்பிலும், மற்றவர்களை உங்களிடம் ஈர்க்க என்னைப் பயன்படுத்துங்கள். நான் சென்று சீடர்களை உருவாக்க எப்போதும் தயாராக இருக்கிறேன், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

Adapted from 20/20: Seen.Chosen.Sent by Christine Caine. Copyright © 2019 by Christine Caine. Reprinted with permission of Lifeway Women. All rights reserved.

இருந்து தழுவப்பட்டது 20/20: கண்டது.தேர்வுசெய்யபட்டது.செலுத்தபட்டது கிறிஸ்டீன் கேஐன் அவரது. பதிப்புரிமை 2019 கிறிஸ்டீன் கேஐன். லைஃப வே வுமென் ஒப்புதல் உடன் மறுஅச்சிடபட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இந்த திட்டத்தைப் பற்றி

20/20: Seen. Chosen. Sent. By Christine Caine

தேவன் உங்களை காண்கிறார் என்கிற உணர்வை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? உங்கள் அன்றாட, சாதாரண வாழ்க்கை குறிப்பிடத்தக்க நித்திய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்டின் கெய்னின் இந்த 7-நாள் தியானத்திட்டம், தேவன் உங்களை எப்படிப் காண்கிறார், எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தார், அதுமட்டுமல்லாது மற்றவர்களை எப்படி பார்க்க அனுப்பினார், மேலும் தேவன் அவர்களைப் பார்க்கும் விதத்தை 20/20 நோக்கோடு பார்க்க உதவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Caine - A21, Propel, CCMக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.christinecaine.com/2020study