20/20: பார்த்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டது. அனுப்பப்பட்டது. கிறிஸ்டின் கெய்ன் மூலம் மாதிரி

நமது அயலாரை நேசிப்போம்
அப்பொழுது நியாயப்பிரமாணத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் எழுந்து நின்று, அவரை [இயேசுவை], சோதிக்க எண்ணி, “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். இயேசுஅவரை நோக்கி "திருச் சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? நீங்கள் வாசித்தது என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாக, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; உன்னைப்போல உன் அயலானையும் நேசி” என பதில் அளித்தார். இயேசு அவரைப் பார்த்து "சரியாக பதில் அளித்தீர்கள், இதை உங்கள் வாழ்வில் கடைபிடியுங்கள். அப்போது நித்திய வாழ்வைப் அடைவீர்கள்" என்றார், ஆனால் அவன் தன்னை நியாயப்படுத்த விரும்பி, இயேசுவிடம், “எனக்கு அடுத்தவர் யார்?” என்று கேட்டான். -லூக்கா 10:25-29CSB
நல்ல சமாரியன் கதை, தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்த ஒரு மனிதனைப் பற்றி இயேசு சொன்ன உவமை. இவன் திருடர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, குற்றுயிராக, சாலையோரத்தில் தூக்கி எறியப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தவர்.
இந்த கதையின்படி, இந்த மனிதனை முதலாவது ஒரு யூத ஆசாரியனும், இரண்டாவதாக ஒரு லேவியரும் சந்தித்தனர். இவர்கள் இருவரும் கடவுளுடைய வார்த்தையை அறிந்தவர்கள். ஜெப ஆலயத்தில் அதிகாரம் பெற்றவர்கள். ஆனாலும், இந்த இருவரும் எவ்வித கரிசனையுமின்றி அவனைக் கடந்து சென்றனர். ஆனால், மூன்றாவது அவனை சந்தித்த மனிதன், மதம் இல்லாத, சமாரியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் இரக்கத்தால் தூண்டப்பட்டு அவனிடம் சென்றான்.
இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் உங்களை காண்கிறார் என்கிற உணர்வை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? உங்கள் அன்றாட, சாதாரண வாழ்க்கை குறிப்பிடத்தக்க நித்திய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்டின் கெய்னின் இந்த 7-நாள் தியானத்திட்டம், தேவன் உங்களை எப்படிப் காண்கிறார், எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தார், அதுமட்டுமல்லாது மற்றவர்களை எப்படி பார்க்க அனுப்பினார், மேலும் தேவன் அவர்களைப் பார்க்கும் விதத்தை 20/20 நோக்கோடு பார்க்க உதவும்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

வனாந்தர அதிசயம்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
