திட்ட விவரம்

அமைதியின்மைமாதிரி

Restless

3 ல் 3 நாள்

கீழ்ப்படிய வேண்டிய ஒரு சட்டமாகப் பார்ப்பதை விட, ஓய்வுநாளை அனுபவிக்க வேண்டிய பரிசாக பார்க்க இயேசு எவ்வாறு மறுதொகுப்பு செய்தார் என்பதை நேற்று பார்த்தோம். ஆக, ஓய்வுநாளானது, இயேசுவின் வார்த்தைகளில், “மனிதனுக்காக உருவாக்கப்பட்டது” (மாற்கு 2:27), அப்படியானால், மனிதனுக்கு என்ன தேவை? என்ற கேள்வி எழுகிறது. இந்தத் திட்டத்தின் முதல் நாளில் நாம் கண்டது போல, அமைதியின்மைக்கு ஒரு மாற்று மருந்து நமக்குத் தேவை. அதாவது, உயிர்கொல்லியான விஷயங்களுக்குப் பதிலாக வாழ்க்கையை உருவாக்கும் விஷயங்களை பரிமாறிக் கொள்வது, நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பது, சிலுவையில் இயேசுவின் பணி எவ்வாறு இந்த உலக அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது என்பதை நமக்கு நாமே நினைவூட்டுவது போன்றவை.



நாம் எப்படி, எப்போது இவற்றை செய்கிறோம் என்பது நபருக்கு நபர் வேறுபடும். இயேசுவை புதிய உடன்படிக்கையாக கொண்டு, நம்முடைய அமைதியின்மையிலிருந்து ஓய்வெடுக்க வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளைத் தான் அனுசரிக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்தபின், அல்லது வருடாந்திர கோடை விடுமுறையில், அல்லது, பாரம்பரியப்படி, ஒவ்வொரு வாரமும் அதே குறிப்பிட்ட நாளில் “சப்பாத்” அல்லது ஓய்வுநாளை அனுசரிக்கலாம்.



நானும் எனது குடும்பத்தினரும் ஒரு ஓய்வுநாள் போன்ற இளைப்பாறுதலின் பரிசை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆர்வமுடன் ஏற்றுக்கொள்கிறோம், நாங்கள் "உயிர்-கொடுக்கும்" விஷயங்களை மட்டுமே செய்ய முயற்சிக்கும் நாளில் எல்லா உழைப்பையும் ஆக்கபூர்வமானவைகளையும் முடிந்தவரை நிறுத்த முயற்சிக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தொலைபேசிகளை விலக்குவது, நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவது, கர்த்தரின் வார்த்தையில் அதிக நேரம் செலவிடுவது மற்றும் எங்கள் நெருங்கிய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை அனுபவிப்பது போன்றவற்றை செய்கிறோம். ஆனால் எனக்கு மிகவும் அமைதிதரும் விஷயம் என்னவென்றால், இந்த ஒரு நாள் மட்டும் எந்தவொரு ஆக்கபூர்வமான உரையாடலையும் நாங்கள் வேண்டுமென்றே நிறுத்தி வைக்கிறோம். அதாவது எனது அடுத்த புத்தகத்திற்கான யோசனைகளைப் பேசுவதும் இல்லை, எங்கள் அடுத்த விடுமுறையைத் திட்டமிடுவதும் இல்லை, வரவிருக்கும் வாரத்திற்கானவற்றைப் பற்றி விவாதிப்பதும் இல்லை. ஒரு நாள், எங்களால் முடிந்தவரை, வெறுமனே இளைப்பாறி, தேவன் எமக்கு அளித்த நல்ல விஷயங்கள், வேலை மற்றும் மக்கள் ஆகிய அனைத்திற்கும் நன்றி சொல்கிறோமே தவிர, வேறு எதற்கும் முயற்சி செய்வதில்லை.



நானும் என் மனைவியும் சில வருடங்களுக்கு முன்பு ஓய்வுநாளை அனுசரிக்கத் தொடங்கியபோது, மனிதன் ஓய்வுநாளுக்காக இல்லாமல், ஓய்வுநாள் மனிதனுக்கானது என்று இயேசு ஏன் சொன்னார் என்பது தெளிவானது. இடைவிடாது தொடர்ந்து சாதிப்பதையும் நிறைவேற்றுவதையும், பொழுதுபோக்குவதையும், செலவழித்தலையும், இடுகையிடுவதையும் போன்ற செயல்பாடுகளை மட்டுமே செய்ய உலகம் தரும் அழுத்தத்திலிருந்து ஓய்வெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு ஓய்வுநாளாகும். நம் வாழ்க்கையையும், வேலையையும், சிலுவையையும் பார்த்து, “இது போதும்!” என மனரம்மியமாக கூறும் நாள் இந்நாள்.



இந்த வகை இளைப்பாறல் எனக்கு எளிதாக வரவில்லை. கொஞ்சம் கூட வரவில்லை. ஆனால் வழக்கமாக இந்த இடைநிறுத்தங்களை நான் எவ்வளவு அதிகமாகப் பயிற்சி செய்கிறேனோ, அவ்வளவு அமைதியற்ற தன்மை மற்றும் கவலையான சூழல் மாறுகிறது. நீங்கள் என்னைப் போல அமைதியற்றவராக இருந்தால், ஓய்வுநாள் போன்ற இளைப்பாறல் உங்களுக்காக என்று இயேசு சொல்வதைக் கேட்க உங்களை ஊக்குவிக்கிறேன். இது இனி சட்டபூர்வமான கட்டளை அல்ல. முன்பை விட இன்று மிகவும் ஏற்ற ஒரு பரிசு இது. நீங்கள் அதை ஆர்வமுடன் ஏற்றுக்கொள்வீர்கள் என்று வேண்டுகிறேன்.



இந்த திட்டம் உதவியாக இருந்ததா?



யோர்தான் ரேய்னருடைய மற்ற படைப்புகளையும் ஆராயுங்கள்


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Restless

"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜோர்டான் ரெய்னர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.jordanraynor.com/restless/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்