திட்ட விவரம்

தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பதுமாதிரி

GOD + GOALS: How To Set Goals As A Christian

5 ல் 2 நாள்

நாள் 2: ஒரு குறிக்கோள் தேவனிடமிருந்து அல்லது உங்களிடமிருந்து தோன்றியது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?



நீங்கள் அதைப் பிரித்து பார்க்கத் தொடங்குவிறீர்கள்: இலக்குகள் இல்லாதிருந்தால், நீங்கள் வாழ்க்கையில் நோக்கமின்றி சுற்றித்திரிவீர்கள். தேவன்-வழிநடத்தும் குறிக்கோள்கள் நல்லது. ஆனால்! அவை தேவனால் வழிநடத்தப்பட்டவைகளா, அல்லது உங்களிடமிருந்து தோன்றுகிறதா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்? நீங்கள் தவறான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள்!



தேவனைப் பற்றிய அற்புதமானது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நிறைய விஷயங்கள், குறிப்பாக, அவர் உங்களுடன் சேர்ந்து இந்த வாழ்க்கையை நடத்த விரும்புகிறார். உங்கள் குறிக்கோள்களிலும் நோக்கத்திலும் நீங்கள் வழிதவறிவிட்டதாக உணரும்போது, ​​அல்லது ஒரு பாதை அல்லது இன்னொரு பாதையைத் தேர்ந்தெடுப்பதில், நீங்கள் அவரிடம் உதவி கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் - அதைக் கொடுப்பதையும் அவர் விரும்புகிறார்! யாக்கோப்பு நிருபம் நமக்கு இவ்விதமாக கற்பிக்கிறது, 'உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்' (யாக்கோபு 1:5).



உங்கள் திட்டங்கள் குறிக்கோளுக்கு நல்லதா என்று தெரியவில்லையா?



கொஞ்சம் இதை செய்து எண்ணிப் பாருங்கள்:




  • தேவனுடைய வார்த்தையைத் திறந்து அதாவது வேதாகமத்தினை திறந்து, உங்கள் மனதில் உள்ள இலக்கை உறுதிப்படுத்தும் குறிப்பிட்ட வசனங்கள் அல்லது கதைகளை வேதாகமத்தில் தேடுங்கள். உங்கள் குறிக்கோள் வேதாகம ரீதியாக ஒலிக்கிறதா? அதை உறுதிப்படுத்தும் குறிப்பிட்ட வசனங்கள் உள்ளனவா? 'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,'
    (2 தீமோத்தேயு 3:16).

  • அவரிடம் கேளுங்கள்!நீங்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டும்படி தேவனிடம் ஜெபியுங்கள். 'நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்'(சங்கீதம் 32:8).

  • வழிகாட்டலுக்காக நம்பகமான நண்பர்களிடமோ அல்லது தேவனை நேசிக்கும் வழிகாட்டிகளிடமோ கேளுங்கள்.'ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்' (நீதிமொழிகள் 15:22).


தேவனைத் தவிர இலக்குகளை வெளிக்கொணர ஒரு அளவு-பொருந்தும்- மந்திர சூத்திரமும் ஏதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதில்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றால், விட்டுவிடாதீர்கள்! இது நீங்கள் செல்ல விரும்பும் செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கலாம். காத்திருப்பில், அடுத்தது என்ன என்பதை நாம் செம்மைப்படுத்தப்பட்டு தயாராக்கப்படுகிறோம். அவருடைய ஞானத்திற்காக காத்திருங்கள், அதை அவர் தம்முடைய சரியான நேரத்தில் உங்களுக்குக் கொடுப்பார்!



என்னுடன் ஜெபம் பண்ணுங்கள்: ஆண்டவரே, உமது வார்த்தைக்கு நன்றி! உமது தெளிவான வழிகாட்டுதலுக்கும் ஞானத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மீதமுள்ள எல்லாவற்றிற்கும் மேலாக உமக்கான என் அன்பினால் பிறந்த இலக்குகளுக்கும் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிய எனக்கு உதவும். உமது குரலை அறிய எனக்கு உதவும், உம்மில் நம்பிக்கை வைத்து, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மைத் தேட உதவும். இயேசுவின் பெயரில். ஆமென்!


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

GOD + GOALS: How To Set Goals As A Christian

ஒரு கிறிஸ்தவராக நமக்காக ஒரு இலக்கை வைத்துக்கொள்வது சரியா? நமக்கு எப்படி தெரியும் அந்த இலக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது நமது ஆசையா என்று? சரி, கிறிஸ்தவ இலக்கு எப்படி இருக்கும்? இந்த 5 நாள் வாசிப்பு திட்டத்தில், வேதத்தை...

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த கல்டிவேட் வாட் மேட்டர்ஸ் அமைப்பிற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு http://www.cultivatewhatmatters.com/youversion/ என்ற வலைத்தளத்தை அணுகவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்