மனதை மறுசீரமைக்க: பாவத்திற்கு எதிர்த்து நில் - 10 நாட்கள் தியானத் திட்டம். name - https://my. bible. com/reading-plans/12779-rewire-your-heart-10-days-to-fight-sinமாதிரி

உங்கள் விருப்பங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? பரிசுத்தமாக வாழ வேண்டும் எனும் ஆசை எங்கிருந்து வருகிறது? நம்மில் எந்தப் பகுதி விசுவாசத்தை தொடங்குகிறது? நமக்குள்ளே உருவாகும் சந்தேகத்தை உருவாக்குவது யார்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் தான்; அது உள்மனம்.
அப்படியென்றால், பாவத்திற்கு எதிரான நமது போராட்டத்திற்கு எவை தடையாக இருக்கிறது? விசுவாசம் தளர்ந்து பின்மாற்றம் அடைய எது காரணம்? இன்றைய தியானப் பகுதியில் பவுல் இவ்வாறு கூறுகிறார்.
உங்களது சொந்த விருப்பங்களால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்
இந்த சிறு பகுதியின் மையக் கருத்து, இதயம் - உள்ளத்தை திறந்து பாருங்கள்.
இந்த அதிகாரத்தில், நற்செய்தியை ஏற்றுக் கொள்ளும்படி கொரிந்து சபை மக்களிடம் பவுல் மன்றாடுகிறார். இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் பவுல் செய்துள்ளார். ஆனாலும், கொரிந்து சபையில் சிலர் இன்னும் பாவத்திலேயே மூழ்கி இருந்தனர்.
அவர்களின் விருப்பங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது.
நமது விருப்பங்கள் எப்படி நம்மைக் கட்டுப்படுத்தும்? இந்த உண்மை மிக எளிமையானது. நாம் விரும்பாத எதையும் செய்ய மாட்டோம். நாம் விரும்புவதை மட்டுமே எப்போதும் தொடர்ந்து செய்கிறோம்.
இதன் பொருள் நாம் விரும்பும் விஷயங்களை மட்டும் தான் செய்கிறோம் என்று அர்த்தமல்ல. நமது செயல்கள் எப்பொழுதும் நம் இதயத்தில் நிலவும் விருப்பத்தையேப் பின்பற்றுகின்றன. அதனால்தான், வேதாகமம் முழுவதும், கர்த்தர் நம் இதயத்தை பாதுகாக்கும்படி எச்சரிக்கிறார்.
நமது விருப்ங்கள் எல்லா நேரத்திலும் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம் முழு இதயமும் அதை ஏற்பதில்லை. அதனால்தான் பாவமும செய்கிறோம். அதே சமயம் நம்பிக்கையோடு அதை எதிர்த்துப் போராடுகிறோம்.
அப்படியானால் நாம் எப்படி மாற முடியும்? பாவத்தை வென்று கர்த்தருக்கு சாட்சியாக வாழ்வது எப்படி? நம்மை கட்டுப்படுத்தும் விருப்ங்களிலிருந்து விடுதலை அடைய வேண்டும்.
இந்ததை செய்ய ஒரே வழி நற்செய்தியின் மூலம் மட்டுமே முடியும். நற்செய்தி மட்டுமே எங்கள் இதயங்களை மாற்றி, புதிய வாழ்க்கை வாழ தகுந்த புதிய உணர்வுகளை உண்டாக்கும் அளவு அழகானதாக உள்ளது.
கிறிஸ்துவில் தேவன் உங்கள் வாழ்வில் செய்துள்ள அனைத்தையும் சிந்திக்கவும். உங்கள் பாவங்கள் தேவனுடைய மகனின் பரிசுத்த இரத்தத்தால் மன்னிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் சிந்திக்கவும். உயர் விலையான சிலுவையால் நீங்கள் தேவனின் குடும்பத்திற்குள் தத்தெடுக்கப்பட்டதன் உண்மையை ஆனந்தமாக காணுங்கள்.
இவ்வாறு நாம் செய்வோமானால், புதிய உணர்வுகள் நம்முடைய இதயங்களில் உயிர் பெறும். நாம் பாவத்துடன் போராடுவதில் நம்முடைய உணர்வுகளை ஒடுக்குவதால் வெற்றி பெற முடியாது. நமது உணர்ச்சிகளை விரிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும். நமக்கு குறைவான உணர்வுகள் தேவையில்லை, அதிக உணர்வுகள் தேவை. மேலும், இந்த உணர்வுகள் நற்செய்தியிலிருந்து வர வேண்டும்.
இந்த ஆய்வின் முழுவதும், ஒவ்வொன்றும் இதயத்திற்கே வந்து சேரும் என்பதை நாம் காண முடியும். இதற்கான மேலும் விவரங்களை அறிய, என் புத்தகம் *உங்கள் இதயத்தை மறுசீரமைக்கவும்* படிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

பற்களைக் கடித்துக் கொண்டு, சோதனையைச் சகித்துக் கொள்ளுவது தான் பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி எனப் பல கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். உண்மையில், நமது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பாவத்தை எதிர்த்துப் போராட முடியாது; நம்முடைய இதயப் பூர்வமான உணர்வுகளின் வழியாகத் தான் போராட வேண்டும். உங்கள் இதயத்தை மறுசீரமைக்கவும் என்ற புத்தகத்தின் அடிப்படையில், இந்த வாசிப்புத் திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. ஆக அடுத்து வரும் பத்து தினங்கள், மனதைப் பற்றிய சில முக்கியமான வேத வசனங்களைத் தியானிக்கலாம். இந்த வேத வார்த்தைகள், நம் மனதைச் சீர்படுத்த உதவும். அத்துடன் எவ்விதம் பாவத்தை எதிர்த்துப் போராடுவது என்பதையும் கற்றுத் தரும்.
More