மனதை மறுசீரமைக்க: பாவத்திற்கு எதிர்த்து நில் - 10 நாட்கள் தியானத் திட்டம். name - https://my. bible. com/reading-plans/12779-rewire-your-heart-10-days-to-fight-sin

10 நாட்கள்
பற்களைக் கடித்துக் கொண்டு, சோதனையைச் சகித்துக் கொள்ளுவது தான் பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி எனப் பல கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். உண்மையில், நமது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பாவத்தை எதிர்த்துப் போராட முடியாது; நம்முடைய இதயப் பூர்வமான உணர்வுகளின் வழியாகத் தான் போராட வேண்டும். உங்கள் இதயத்தை மறுசீரமைக்கவும் என்ற புத்தகத்தின் அடிப்படையில், இந்த வாசிப்புத் திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. ஆக அடுத்து வரும் பத்து தினங்கள், மனதைப் பற்றிய சில முக்கியமான வேத வசனங்களைத் தியானிக்கலாம். இந்த வேத வார்த்தைகள், நம் மனதைச் சீர்படுத்த உதவும். அத்துடன் எவ்விதம் பாவத்தை எதிர்த்துப் போராடுவது என்பதையும் கற்றுத் தரும்.
இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக, Spoken Gospel நிறுவனத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி. மேலதிக தகவலுக்கு: https://bit.ly/2ZjswRT