உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்மாதிரி

உன்னதத்தில் மகிமை
பிரதிபலித்தல்
தேவன் நிகரற்றவர். போட்டியற்றவர். குறைபாடில்லாதவர். தேவைகள் அற்றவர். எல்லாவற்றிக்கும் முன்னதாக அவரே இருக்கிறார் மேலும் நாளின் இறுதியில் நிற்பவர் அவரே. இவ்வுலகில் சிறு தேவன்கள் பல இருந்தாலும், நமது தேவன் பரலோகத்தையும், உலகத்தையும் படைத்தவர். அவருக்கு யாரும் ஒப்பில்லாதவர். அவருக்கு அருகாமையில் கூட யாரும் வரமுடியாது.
எனவே இன்று அவருக்காக காத்திருகையில், அவரை போற்றுங்கள். உங்கள் சூழ்நிலைகள் தலைகிழாக தோன்றினாலும், அவரது சிம்மாசனம் நேராகவே உள்ளது! காத்திருகையில் அவரை போற்றுங்கள். அவரை வியந்து உயர்த்துங்கள். ஆகையால் இன்று அதிகம் கேட்காமல், அவரது நாமத்தை மற்ற எல்லா பெயர்களுக்கு மேல் உயர்த்துங்கள். அந்த திருநாமம் உங்கள் இருதயத்தை நிலைபெருத்தி உங்கள் ஆன்மாவை சஞ்சலமின்றி செய்யட்டும். உங்களுடைய புகழாரம் விசுவாசத்திற்காகவும், பாசத்திற்காக போட்டியிடும் மற்ற எல்லாவற்றையும் மூழ்கடிகட்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்கள் பாடல் உங்களது எண்ணங்களை மிகுந்த உயர்ந்த இடத்திற்கு எழுப்பும்.
தியானம்
உன்னதத்தில் மகிமை
நீரே முதல்வர்
நீரே முன் செல்பவர்
நீரே கடையானவர்
ஆண்டவரே, நீரே திரும்பியவர்
உமது நாமம் எல்லொரும் காண ஒளிர்கின்றது
விண்மீன் பெருந்திரள் உமது மகிமையை பறைசாற்றுகின்றன
உன்னதத்தில் மகிமை
உன்னதத்தில் மகிமை
உன்னதத்தில் மகிமை
உம்மை தவிர வேறு தெய்வமேதுமில்லை
உலகின் ஒளியே
பிரகாசமான விடிவெள்ளியே
உமது நாமம் எல்லோரும் காண பிரகாசிக்கும்
நீரே ஒருமையானவர்
நீரே எனது மகிமை
ஆண்டவரே வேறு எவரும் உமக்கு ஒப்பில்லாதவர்
ஆண்டவரே
உலகம் ஒன்றுகூடி உமது மகிமையை பறைசாற்றுகின்றது . . .
உன்னதத்தில் மகிமை . . . உமக்கே ஆண்டவரே
உலகம் முழுதும் உம்மை துதிபாடும்
மதி, விண்மீன்கள், கதிரவன், மழை
மற்றும் தேசங்கள் அனைத்தும்
நீரே தேவன் என அறிவிக்கும், நீரே அரசாள்வீர்
மகிமை, மகிமை ஆலேலுயா
மகிமை, மகிமை உமக்கே ஆண்டவரே
மகிமை, மகிமை ஆலேலுயா
ஆலேலுயா
கிறிஸ் டாம்லின், மாட் ரெட்மேன், ஜெஸ்ஸி ரீவ்ஸ், டேனியல் கார்சன், எட் கேஷ்
ஜெபம்
பிதாவே, நான் உங்களிடம் ஏது சொல்வேன்? உமக்கு ஈடானவரோ, ஏதிரானவரோ எவரும் இல்லை. உங்களுடன் ஒப்பிடும்போது என் வார்த்தைகளும் எண்ணங்களும் மிகச் சிறிதானவை. நான் விண்மீன்கள் நிறைந்த இரவைப் பார்த்திருக்கிறேன், அது உங்கள் மகிமைக்கு ஒரு மெழுகுவர்த்தியைப் பிடிக்க முடியாது. உமது புகழ் கீதத்தில் சேர முற்படும்போது என் விசுவாசத்தை விரிவுபடுத்துங்கள், எனக்கு வார்த்தைகளை கொடுங்கள்.
இப்பொழுதும் எப்போதும் எல்லா புகழும் உங்களுடையது. நான் இன்று அந்த சத்தியத்தில் நடப்பேன். நான் அதை நம்புவேன். மேலும் அதுபோன்று செயல்படுவேன். அதை போல ஜெபிக்கவும். அதை போல கொடுப்பேன். உங்களை போல யாரும் இல்லை என துதிப்பேன். ஆமென்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

தேவனுக்கு செவிக்கொடுத்தல்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

கிறிஸ்துமஸ்காக (கிறிஸ்துவுக்காக) காத்திருத்தல்

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை
