திட்ட விவரம்

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்) மாதிரி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

7 ல் 1 நாள்

கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  - என் வாழ்வின் ஆண்டவர் யார்? 


மனிதர்களாகிய  நாம், இயல்பாகவே கணக்கு  ஒப்புவித்தல்  என்ற  பொறுப்பை  விரும்புவதில்லை. தொழில்  சம்மந்தமான ஆலோசனை , வழிகாட்டல் போன்ற உரையாடல்களில்  அநேக  இளைஞர்களை  சந்திக்கிறேன் .வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி நாங்கள் விவாதிப்போம். பல இளைஞர்கள் தங்கள் சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க விரும்புவதாக சொல்லுவார்கள்.   நான் ஏன் என்று அவர்களிடம் கேட்கும்பொழுது . தாங்கள் ஒரு முதலாளி என்ற அந்தஸ்தில் இருக்க விரும்புவதை சொல்லுவார்கள். இதன் மூலம், எந்த ஒரு நபரும் மற்றவர்களுக்கு கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்பில் இருக்க விரும்பவில்லை என்பது மனித இயல்வின் பகுதியாக இது  தெரிகிறது. 


கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கையில் இயேசுவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதுதான் முதல் முன்நிபந்தனை ஆகும். ஒரு  தேவ மனிதன் ஒருமுறை  இப்படியாக  என்னிடம் சொல்லுவதை கேட்டேன். அவருடைய  ஊழிய  பிரயாணத்தில் மூன்று வகையான  குடும்பங்கள்  அவரை  தங்களுடைய  வீடுகளுக்கு  அழைத்து  செல்வார்களாம். ஒரு  குடுத்பத்தினர்  அவருக்கென்று  ஒரு தனி  அறைய கொடுத்து , இங்கு  வசதியாக  தங்கி கொள்ளுங்கள்  என்பார்களாம் . மற்றொரு  குடும்பத்தினர்  ஒரு  பொதுவான  பகுதியை  வழங்கி  அதிலுள்ள  வசதிகளை  பயன்படுத்தி  கொள்ளுங்கள்  என்பார்களாம் . ஆனால் வேறொரு  குடும்பத்தினரோ , இந்த  முழு  வீடும் உங்களுக்குரியது . வசதியாக  தாங்கிக்கொள்ளுங்கள்  என்பார்களாம். நாம்  பொறுப்புடையவர்களாய்   இருப்பதற்கு இப்படிப்பட்ட வரையறுக்கப்படாத தொடர்பை  நம்முடைய  வாழ்வில் யேசுவிற்கு  வழங்க  வேண்டும். 


நாம்  எதற்கெல்லாம் பொறுப்பு ?  மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்  என்று பைபிள் கூறுகிறது (மத் 12:36).  கிறிஸ்த   உக்கிரணகாரர்களாகிய  நாம் , பணி  செய்யுமிடத்தில் , நமக்கு  கீழாக   ஆண்டவர்  கொடுத்திருக்கும்  மக்களுக்கு  பொறுப்புள்ளவர்களாய்  உள்ளோம்.  பெற்றோர், கணவர்கள் / மனைவிகள் என நாம் கடவுளுக்கு முன்பாக நம் குடும்பங்களுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும்.   நம் அன்றாட வாழ்க்கையில்,

நாம்  யாரையெல்லாம்   தொடர்பு  கொள்ளுகின்றோமோ   இயேசு கிறிஸ்துவின் அன்பை அவர்கள் நம்மில் காண்பதற்கு நாம் பொறுப்பு. 


நம் வாழ்வில் எந்த ஒரு பகுதியும் நம் கடவுளுக்கு முன்பாக மறைக்கப்படவில்லை என்பதை நாம்  தேவனோடு நடப்பதில் உணருகிறோம். இருக்கிற  பிரகாரமாகவே எல்லாவற்றையும் அவர் காண்கிறார்.  பல முறை இதை  நாம்  உணர தவறிவிட்டோம். நம்  வாழ்வில் எந்த பகுதியில்  கணக்கு ஒப்புவிக்க  வசதியாக  உள்ளதோ  அப்பகுதியில்  கணக்கு ஒப்புவிக்க  முயற்சி  செய்கின்றோம்.ஆனால்  நமக்கு  வசதியாக  அமையாத  காரியத்தில்  கணக்கு ஒப்புவிக்க  தவறிவிட்டோம். கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின்கீழ் நாம் படிப்படியாக நம் வாழ்க்கையின்  பல பகுதிகளை  கொண்டுவரும்பொழுது  ​​நம்முடைய பொறுப்பு இன்னும் சிறப்பாகவும் எளிதாகவும்  அமையும். 


இன்றைய  சிந்தனை :   


தேவனின்  அதிகாரத்திற்கு  நாம்  கீழ்ப்படிப்பது  என்பது கிறிஸ்துவுக்குள்   நமது  சுதந்திரத்திற்கும்  அவருக்காக  நாம்  என்ன  காரியத்தை  நிறைவேற்றுகிறோம்  என்பதனை  எடுத்து  காட்டும்  ஒரு  திறவு கோலாகும்.


ஜெபம் : 


ஆண்டவர்  இயேசுவே,  உம்முடைய  கரங்களில்  என்னுடைய  வாழ்வை  நான்  அர்ப்பணிக்கிறேன் . உம்முடைய  பிள்ளையாகிய  நான்  , இந்த  உலகத்தில்  என்னுடைய பொறுப்பை  அறிந்து கொள்ளவும் , அதன் மூலம்  உம்முடைய  மகிமையை  வெளிப்படவும்   உதவி  செய்யும்.  ஆமென். 

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது ...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக விக்டர் ஜெயரருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
http://victorjayakaran.blogspot.in/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்