திட்ட விவரம்

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்மாதிரி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 ல் 6 நாள்

வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து போவதில்லை


அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல், “வெளியே” என்ற வாசகம் எழுதப்பட்ட ஒரு கதவினைத் தாண்டி நீங்கள் எப்போதாவது சென்றது உண்டா? உலகில் அநேகருக்கு கல்லறைக்குப் பிறகு என்ன இருக்கிறது என்பது தெரிவதேயில்லை. ஆனால் இன்று உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்கள் என்பதே, நாளை உங்கள் வாழ்க்கை எப்படி முடியும் என்பதை தீர்மானிக்கும். 


ஏதோ 60 அல்லது 80 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்வதற்காக நாம் சிருஷ்டிக்கப்படவில்லை. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் நித்தியத்தை நோக்கியே பயணிக்கின்றனர். நீங்களும் நித்தியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றீர்கள். ஒரு கிறிஸ்தவனுக்கு மரணம் என்பதே இல்லை. மரணம் என்பது நித்தியத்துக்குள் பிரவேசிக்கும் வாசல் மட்டுமே!


வாழ்க்கையின் உக்கிராணத்துவம் என்பது நித்தியத்தைக் குறித்த வெளிச்சத்திலேயே நாம் இவ்வுலக வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதாகும். 


இந்த சத்தியத்தை நன்கு புரிந்து கொண்டதினால் பவுல் அப்போஸ்தலன் “நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” என்ற தனது இலட்சியத்தை வெளிப்படுத்துகிறார். பவுல் தனது இருதயத்தை நித்தியத்தின் மேலே பதித்து வாழ்ந்ததினால், தனது உலக வாழ்க்கையை கடவுளுக்கு மட்டுமே பிரியமானதாக செலவளிக்க விரும்பினார்.


நீங்கள் நித்தியத்தைக் குறித்த சிந்தையுடனே வாழ்வீர்களானால், இன்றைய தினத்தைக் குறித்த அர்த்தத்தையும், நம்பிக்கையையும் பெற்று, ஆண்டவரைப் பிரியப்படுத்தும் நோக்கத்துடனே வாழ்வீர்கள். 


முதலாவதாக நித்தியத்தின் வெளிச்சத்தில் உங்களின் இவ்வுலக வாழ்க்கை கட்டமைக்கப்படுமானால், அதுவே அர்த்தம் மிகுந்த வாழ்க்கையாக மாறி விடும்.


இரண்டாவது, ஒரு நிர்வாகி தன்னிடம் கொடுக்கப்பட்டவைகளைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டியதிருப்பதால், ஒரு சிறந்த நிர்வாகிக்கு எதிர்காலத்தில் வெகுமதி கிடைக்கும் என்ற வாக்குத்தத்தமும் இருக்கிறது.


மத்தேயு 25:21-23 வசனங்களில் சிறந்த நிர்வாகிகளை எஜமானர் பாராட்டினதையும், 24-30 வசனங்களில் மோசமான நிர்வாகிக்கு என்ன நேர்ந்தது என்பதையும் வாசிக்கிறோம்.


பரிசுத்த வேதாகமம் வெகுமதிகளையும், கிரீடங்களையும் குறித்து போதிக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட சிறந்த பாராட்டுப்பத்திரம் எஜமானராகிய ஆண்டவரே ”நல்லது உண்மையும் உத்தமுமுள்ள ஊழியக்காரனே, உன்னுடைய எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி” என்று சொல்வதாகும்.


அதே வேளையில் தாலந்துகளின் உவமையில், தனது தாலந்தை புதைத்து வைத்து லாபம் சம்பாதிக்கும் நல்ல வாய்ப்பை நழுவவிட்டதினால், எஜமானரால் தண்டிக்கப்பட்டதையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


அதைப் போலவே, மோசமான நிர்வாகிகளை “அக்கிரம செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்” என்று கர்த்தர் தண்டிப்பதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.


அங்கே இரண்டாவது வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. எனவே, இந்த உலக வாழ்க்கையை சரியாக பயன்படுத்தி சிறந்த உக்கிரணாரக்காரர்களாக வாழுவோம்.


மேற்கோள் : “இவ்வுலகத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து ஆனந்தமும், செல்வங்களும் கிடைப்பதாக இருந்தாலும், அதற்கு ஈடாக பரலோகத்தின் ஒரு க்ஷணப்பொழுதைக்கூட நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” – மார்ட்டின் லூத்தர்.


ஜெபம் : ஆண்டவரே, நித்தியம் உண்டு, அங்கே கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அறிந்த நான், நீர் எனக்கு கொடுத்துள்ள இந்த உலக வாழ்க்கையில் நான் சிறந்த உக்கிராணக்காரனாக விளங்கிட எனக்கு உதவி செய்யும். ஆமென். 

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம...

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய 
http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்