திட்ட விவரம்

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்மாதிரி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 ல் 5 நாள்

மோசமான மேலாளர்களின் ஆரோக்கியமற்ற மனப்பான்மை 


தாலந்துகளின் உவமையில், எஜமானர் முதல் இரண்டு வேலைக்காரர்களை மெச்சிக்கொண்டதை நாம் பார்க்கிறோம். ஆனால் மூன்றாம் வேலைக்காரனிடம் வரும் போது, எஜமானரைக் குறித்த அடிப்படை மனப்பான்மையே தவறாக இருந்ததால் அவன் கடிந்து கொள்ளப்பட்டான்.


நம்முடைய நடத்தைகளும், செயல்களுமே கடவுளைக் குறித்த நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. தனது எஜமானர் கடினமுள்ள மனிதர் என்பதே தனது எஜமானரைக் குறித்த மூன்றாவது வேலைக்காரனின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இது ஆரோக்கியமற்ற ஒரு பயம். அது பக்தி மற்றும் கனத்தினால் உண்டாகிற பயமாயிராமல், தண்டனையைக் குறித்த பயமாக இருந்தது. இந்த மூன்றாவது வேலைக்காரன் தனது எஜமானருடைய பொருட்களைக் குறித்து கவலைப்படாமல், தன்னைக் குறித்தே கவலைப்பட்டதாக தெரிகிறது. அவனது செயலற்ற தன்மைக்கு பல சாக்கு போக்குகளை அவன் கூறினான்.


கடவுளைக் குறித்த தவறான புரிதல், பல நேரங்களில் நல்ல நிர்வாகிகளாக செயல்படாதபடி நம்மைத் தடுத்து விடுகிறது. நம்முடைய ஆண்டவர் தனது கரத்தில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு நம்மை தண்டிப்பதற்காக காத்திருப்பவர் அல்ல. மாறாக, நம்மேல் மிகவும் அன்பு செலுத்துகிறவராகவும், நம்மிடம் அவர் கொடுத்துள்ளவற்றைக் கொண்டு சிறப்பான காரியங்களை நாம் செய்யும்படி உதவுகிறவருமாயிருக்கிறார். 


சிறப்பான நிர்வாகிகளாக நாம் செயல்படமுடியாததற்கு இன்னொரு தடை சோம்பேறித்தனம். ஒரு நல்ல உக்கிராணக்காரன் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறான். ஆனால் ஒரு கெட்ட உக்கிராணக்காரனோ வாய்ப்புகளை நழுவ விடுகிறான்.


ஐந்து மற்றும் இரண்டு தாலந்து வாங்கின வேலைக்காரர்களின் செயலுக்கும், ஒரு தாலந்தை வாங்கின வேலைக்காரனின் செயலுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வினைச்சொற்களின் வித்தியாசத்தை சற்று கவனியுங்கள்.



  • ஐந்து மற்றும் இரண்டு தாலந்தை வாங்கினவர்கள் “போய்” (16ம் வசனம்) ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவன் சென்று விட்டான்.

  • ஐந்து மற்றும் இரண்டு தாலந்தை வாங்கினவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு “வியாபாரம் பண்ணி”, ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவன் “நிலத்தைத் தோண்டி புதைத்து வைத்தான்”.

  • ஐந்து மற்றும் இரண்டு தாலந்தை வாங்கினவர்கள் ”வேறு” கூடுதல் தாலந்துகளை சம்பாதித்தனர், ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவன் தனது எஜமானரின் பணத்தை “புதைத்தான்”.

  • ஐந்து மற்றும் இரண்டு தாலந்தை வாங்கினவர்களைக் குறித்த வினைச்சொற்கள் முற்போக்காக உள்ளன (“போய்”, “வியாபாரம் பண்ணி”, சம்பாதித்தான்”). ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவனைக் குறித்த வினைச்சொற்கள் பிற்போக்கானவை (போய்விட்டான், நிலத்தைத் தோண்டி, புதைத்து).


செய்யாமல் விட்ட பாவங்கள் செய்த பாவங்களைப் போலவே ஆபத்தானவைகள் ஆகும். நாம் எதைச் செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தும், அதை செய்யாமல் போனால், நாம் ஒரு மோசமான நிர்வாகி என்பது நிருபணமாகும்.


நம்முடைய வாழ்க்கையின் எல்லா பகுதிகளும் கடவுளுடைய ஆளுகையின் கீழ் கிடையாது, சில பகுதிகள் மட்டுமே அவருடைய ஆளுகையின் கீழ் இருக்கிறது என்று நாம் நினைக்க முற்படுகிறோம். நாம் உரிமையாளர்கள் என்ற மனநிலையோடு, உக்கிராணக்காரர்கள் என்பதை மறந்து விடும் போது, நம்முடையவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாமல், சுயநலவாதிகளாக மாறிவிடுகிறோம். நம்மிடம் உள்ள எல்லாமே கடவுடைய ஈவு என்பதை உணர்ந்து கொள்ளாமல், கர்வம் உடையவர்களாய் மாறி விடுகிறோம். நம்மிடம் இல்லாதவைகளை யோசித்து யோசித்து, நம்மிடம் உள்ளவைகளுக்காக கடவுளுக்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாகவும் மாறி விடுகிறோம். நாம் குறுகிய பார்வை உடையவர்களாக மாறி, நித்தியத்தைக் குறித்து யோசிக்காமல், இந்த உலக வாழ்வையே அதிகமாக நினைக்கத் துவங்குகிறோம்.


மேற்கோள் : “கடவுள் ஒரு மனிதனுக்குள் எவ்வளவு வல்லமையை வைக்க முடியும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. தெய்வீக பெலன் வரும் போது, மனுஷீக பெலவீனம் ஒரு தடையாக இருக்காது” – சார்லஸ் ஸ்பர்ஜன்.


ஜெபம் : ஆண்டவரே, நீர் எனக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் என் சோம்பேறித்தனத்தினால் இழந்துவிடாதபடிக்கும், சிறந்த நிர்வாகிய நான் மாறும்படிக்கும் எனக்கு உதவி செய்யும்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம...

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய 
http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்