திட்ட விவரம்

இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி

இவைகளில் அன்பே பிரதானம்

26 ல் 7 நாள்

இயற்கையான, மனுஷ அன்பு சுயநலமுள்ளது. “இது எனக்கு வேண்டும்”, “இது என்னுடையது”, “எனக்கு இது தேவை”, அடுத்தவனிடத்தில் இருந்து இதை நான் அடைய வேண்டும் என்பதை மட்டுமே மனுஷ அன்பு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தெய்வீக அன்பு சுயநலமற்றது. உன்னைப் பயன்படுத்தி நான் எப்படி லாபமடைவது என்று அது யோசிப்பதில்லை. நான் எப்படி அடுத்தவருக்கு கொடுப்பது என்று அது யோசிக்கிறது. தேவனுடைய ஜீவனுள்ள சபை எந்த அளவுக்கு தேவனுடைய அன்பை அறிந்து, அதில் நடக்க வேண்டியதாயிருக்கிறது! அது உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். 


நீங்கள் இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு மறுபடியும் பிறந்த போது, தேவன் உங்களுடைய தகப்பனாக ஆகிவிட்டார். அவர் அன்பின் தேவன். நீங்கள் அன்பு தேவனின் அன்பு பிள்ளைகள். ஏனென்றால் அன்பாகவே இருக்கிற தேவனுக்கு பிறந்த பிள்ளைகள் நீங்கள். அன்புதான் உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய சுபாவம். அவருடைய சுபாவம் உங்களுடைய ஆவியில் உள்ளது, மாம்சத்தில் அல்ல. இந்த தெய்வீக அன்பு என்னிடம் இல்லை என்று நீங்கள் சொல்லமுடியாது. ஏனென்றால் தேவனுடைய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடத்திலும் அந்த அன்பு உள்ளது. இல்லையென்றால் அவர்கள் தேவனுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியாதே! அவர்கள் அந்த அன்பை பயிற்சி செய்யாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்குள் அன்பு இருக்கிறது.


எனவே உங்கள் அன்பின் சுபாவத்திற்கு வேத வசனத்தை ஊட்டுங்கள், அதை பயிற்றுவியுங்கள், அப்போது அது வளரும். நீங்கள் தெய்வீக அன்பில் வளர முடியும். உங்கள் ஜீவிய காலத்தில் சொல்லிக் கொள்ளும் வண்ணம் நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பினால், அதற்கு நீங்கள் 1 கொரிந்தியர் 13ல் சொல்லப்பட்டுள்ள தெய்வீக அன்பிலே நடக்க பழகிக் கொள்ள வேண்டும்.


எனவே அகாபே அன்பு, தேவன் நம் மீதும், நமக்குள்ளும் வைத்திருக்கும் அவருடைய அன்பைக் குறிக்கிறது. பண்டைய கிரேக்க செம்மொழி நூல்களில் இந்த வார்த்தை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையின் வல்லமையை அல்லது இந்த வார்த்தை இருக்கிறது என்பதை அறியாமல் அதை அவர்கள் ஒருவேளை பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம். இந்த அன்பின் அஸ்திபாரமே தேவன்தான். இந்த அன்பு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்திலும், கல்வாரி சிலுவையிலும் வெளிப்படுவதை நாம் காணலாம். பிறருக்கு தெளிவைக் கொண்டுவர இந்த அன்புதான் நமக்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது. ஈராஸ், பிலெயோ மற்றும் ஸ்டோர்கே அன்பிற்கு மகிமையையும் கௌரவத்தையும் கொடுப்பதும் இந்த அகாபே தான்.

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்