மன அழுத்தம்
ஜீவனைப் பேசுதல்
வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம்.
கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
Walk with Jesus - பயப்படாதே !
இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, " பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் " என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு !
அமைதியின்மை
"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் - "அவர்" மூலமாக - இயேசு - நம்முடைய சமாதான காரணர்.
தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்
ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இல்லை என்று நீங்கள் விரக்தியடைகிறீர்களா? உங்கள் டூ-டூ பட்டியலில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது? சோர்வில் சோர்வடைந்து தேவனுடைய வார்த்தையை உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்துடனும் செலவழிக்க போதுமான நேரம் இல்லாததா? இவை உலகில் மிகவும் பொதுவான போராட்டங்களாக இருக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால் நம் காலத்தை நிர்வகிப்பதற்கு தெளிவான நியமங்களை வேதாகம் நமக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் அந்த வேதவாக்கியங்களின் முலம் வெளிப்படுத்தி, இந்த வாழ்க்கையின் மிதமுள்ள நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதற்கான தரமான நடைமுறை ஆலோசனையை உங்களுக்குக் கொடுக்கும்!
கவலை
அறியாதவற்றை பற்றிய கவலையாலும் பயத்தாலும் நம் வாழ்க்கை எளிதாக நிரம்பி விடலாம். ஆனால் தேவன் நமக்கு பயம் மற்றும் கவலையின் ஆவியை கொடாமல், தைரியத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனிடம் நீங்கள் திரும்ப இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு உதவும். கவலைக்கு தீர்வான முடிவு தேவனிடம் உங்கள் நம்பிக்கையை வைப்பது தான்.
எதைக்குறித்தும் கவலையில்லை
உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.
கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவது
நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுது நீங்கள் இல்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் தனியாக இல்லை. Life.Church இன் இளைஞர்களுக்கான ஒரு வேதபாடமாகிய "கூட்டாக" என்பது வழங்கும் இந்த 7 நாள் வேதாகமத் திட்டத்தில், வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளை நாம் ஒன்றுசேர்ந்து கண்டுபிடிப்போம்.
அமைதியாக இருங்கள்: அமைதியான காலத்திற்கான எளிய வழிகாட்டி
அமைதியாக இருங்கள். சிலருக்கு, இந்த இரண்டு எளிய வார்த்தைகள் மெதுவாகச் செல்ல வரவேற்கத்தக்க அழைப்பு. மற்றவர்களுக்கு, அவை சாத்தியமற்றதாக உணர்கிறது, பெருகிய முறையில் சத்தம் நிறைந்த நம் உலகில் அணுக முடியாதது அல்லது பராமரிப்பது மிகவும் கடினம். பிரையன் ஹீஸ்லி, நம் இதயங்கள் அமைதியாக இருப்பதற்கு நாம் எப்படி நிலையானதாக இருக்க வேண்டியதில்லை என்பதையும், முழு, பிஸியான வாழ்க்கையின் மத்தியிலும், கடவுளுடன் எப்படி அமைதியான நேரத்தை செலவிட முடியும் என்பதையும் விளக்குகிறார்.